Politics

" ஒன்றிய அரசு இன்னும் எத்தன பேரை சாவடிக்க போகிறது ?" - நீட்டால் தற்கொலை செய்த மாணவரின் நண்பர் ஆதங்கம் !

சென்னை குரோம்பேட்டை குறிஞ்சி நகரில் வசித்து வந்த ஜெகதீஸ்வரன் என்ற மாணவர் மாணவர் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார்.மருத்துவ படிக்கும் எண்ணத்தில் நீட் தேர்வை எதிர்கொண்ட நிலையில் இரண்டு முறை நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் போனது, இதன் காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்த அவர், நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சென்னை குரோம்பேட்டை அருகே நேற்று முன்தினம் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவர் ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வ சேகர் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . மகனின் சாவுக்கு நீட் தேர்வு தான் காரணம் என்று பேட்டியளித்திருந்த அவர் மனைவியை பிரிந்து மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் மகனின் பிரிவை தாங்க முடியாமல் தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தனது நண்பன் ஜெகதீஸ்வரன் இழப்பால் ஏற்பட்ட சோகத்தில் ஃபயாஸ்தின் என்ற மாணவர் பேசிய வீடியோ தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களை மத்தியில் பேசிய அந்த மாணவர். ". நீட் தேர்வில் நான் 160 மதிப்பெண்தான் எடுத்தேன். ஆனால், ஜெகதீஷ் 400 மதிப்பெண்களை எடுத்தார். என்னோட அப்பாக்கு வசதி இருந்ததால் தனியார் மருத்துவ கல்லூரியில் 25 லட்சம் ரூபாய் பணம் கட்டி என்னை மருத்துவ படிப்பில் சேர்த்துவிட்டார்.

ஆனால், 2 தடவை நீட் தேர்வு எழுதி அதில் நல்ல மதிப்பெண் எடுத்தும் ஜெகதீஸ்வரனால் மருத்துவப்படியில் பெறமுடியாமல் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டான். அதிகமாக பணம் கட்டி படித்தவர்கள் எப்படி சேவை மனப்பான்மையோடு டாக்டர் தொழில் செய்வார்கள். அப்படி பணம் கட்டி மருத்துவம் பார்ப்பவர்கள் எப்படி மக்களுக்காக சேவை செய்வார்கள். செலவு செய்ததை எடுக்கத்தான் பார்ப்பார்கள்.

ஜெகதீஸ்வரனுக்கு வெளிநாட்டுக் கல்லூரிகளில் இருந்து அழைப்பு வந்தது. ஆனால் அவனுக்கு தமிழகத்தில் பயின்று தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எண்ணம். நான் இந்த சீட்டுக்கு தகுதியானவன் இல்லை. ஜெகதீஸ் போன்றவர்களால்தான் எனக்கு மக்கள் பணி எண்ணமே வந்தது. இங்க கோழியில் இருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா என்பது போல் காசு போட்டதால் காசு பார்க்கிறானா? இல்லை காசு பார்ப்பதற்காக காசு போடுறானா என்பதே புரியவில்லை.

ஒரு தனியார் கார்ப்பரேட் பள்ளியில் படித்த எங்களாலே முடியவில்லை என்றால் அரசுப் பள்ளி மாணவர்கள் இதை எப்படி எதிர்கொள்வார்கள் என்றே தெரியவில்லை. இப்போது ஒரு மாணவர் நீட்டில் 720-க்கு 720 வாங்கியுள்ளார். அவர் ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2-வுக்கே ரூ.15 லட்சம் செலவழித்துள்ளார். மருத்துவப் படிப்புக்கு ரூ.1.5 கோடி போட்டுவிட்டு மருத்துவராக வருபவருக்கு மக்கள் பணியில் எப்படி நாட்டம் செல்லும். எதுக்குத்தான் இந்த நீட். இதை வைத்து இந்த ஒன்றிய அரசும் ஆளுநரும் என்னதான் சாதிக்கப்போகிறது. நீட் தற்கொலை எங்கெங்கோ கேட்டோம். அதிர்ச்சியாகவில்லை. ஆனால் இப்போது எங்கள் நண்பர் ஜெகதீஸ் போனபின்னர் ரொம்பவே அதிர்ச்சியா இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

Also Read: 1989-ல் சட்டமன்றத்தில் ஜெயலலிதா நடத்திய சேலை கிழிப்பு நாடகம்.. -திருநாவுக்கரசர் MP கூறியது என்ன ?