Politics

No Confidence Motion : “பயப்படாதீங்க..” - நாடாளுமன்றத்தில் பாஜகவை அலறவிட்ட ராகுல் காந்தி MP.. முழு உரை!

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மணிப்பூர் விவகாரத்தில் மோடி அரசு பேச வேண்டும் என வலியுறுத்தி இந்தியா கூட்டணி 'நம்பிக்கை இல்லா தீர்மானம்' கொண்டு வந்தது. இதன் மீதான விவாதம் நேற்று தொடங்கி இன்று 2-வது நாளாக நடைபெற்றது. இதுகுறித்து எதிர்க்கட்சி கூட்டணி எம்.பிக்கள் மோடிக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.

இன்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பேசும் போது பா.ஜ.கவினர் குறுக்கிட்டு கூச்சல் குழப்பம் செய்தனர். மேலும் ராகுல் காந்தி, மணிப்பூர் விவகாரத்தில் மோடி மீதான குற்றசாட்டுகளை அடுக்கடுக்காக முன்வைத்தார். அவர் பேசிய முழு விவரம் பின் வருமாறு :

சபாநாகயரை வரவேற்கும் போது ஜெய் ஸ்ரீராம்னு சொல்றாங்க ? நாடாளுமன்றத்திற்கு அழைத்ததற்கு நன்றி.. கடந்த முறை கொஞ்சம் கடினமாக பேசிவிட்டேன், அதானியை பத்தி பேச மாட்டேன் பயப்படாதீங்க.. ரூமி சொன்னார், மனசுல இருந்து வர்ற வார்த்தைகள் நேரடியாக மனசுல பாயும், நான் இன்னைக்கு அப்படித்தான் பேசப்போறேன்.. அடிக்க மாட்டான், பயப்படாதீங்க..

கடந்த ஆண்டு, 130 நாட்கள், இந்தியாவோட ஒரு முனையிலிருந்து இன்னொரு முனை வரை சென்றேன். கடல் முதல் பனிவரை நடந்தேன்; யாத்திரை நிறைவடையவில்லை. கண்டிப்பாக லடாக் வருவேன். ஏன் நடக்குறீங்க? கன்னியாகுமரியிலிருந்து கஷ்மீர் வரை ஏன் போனீங்க? என்று நிறைய பேர் என்னிடம் கேட்டாங்க. ஆரம்பத்துல நான் பதில் சொல்ல முடியல, எனக்கே தெரியல போல..

எந்த பொருள் மீது எனக்கு அளவுகடந்து அன்பு இருக்கிறதோ, எந்த விசயத்துக்காக மோடியின் சிறைக்கு செல்ல தயாராக இருக்கிறேனோ, பத்து வருசமா திட்டு வாங்கிருக்கேன். எந்த விசயம் என் நெஞ்சத்தை இறுக்கமா பிடிச்சி வச்சிருந்துச்சோ, அதை இன்னும் ஆழமா புரிஞ்சுக்க நினைச்சேன்

தினமும், 10 கிமி ஓட முடிஞ்ச என்னால 25 கிமி நடக்க முடியாதா?? அகங்காரத்தை இந்தியா அழிச்சிடுச்சு, பயம் வந்திருச்சு. கால்ல பழைய காயத்தால துவண்டு போய்ட்டேன். அப்படியான தருணங்கள்ல ஒரு சக்தி வரும்.. அப்படித்தான் ஒரு எட்டு வயசு குழந்தை, என் கைல ஒரு கடிதத்தை திணிச்சது. 'ராகுல் உன் கூட நடக்குறேன்னு' அந்த குழந்தை மட்டுமில்ல, லட்சக்கணக்கான மக்கள் சக்தி கொடுத்தாங்க.

ஆரம்பத்துல… ஒரு விவசாயி வந்தாரூ, நான் அவருக்கு ஆலோசனை சொல்லிட்டிருந்தேன். அப்புறம், கொஞ்ச நாள்ல மக்கள் அதிக எண்ணிக்கைல வரவும், நான் அமைதியாயிட்டேன். கூட்டத்தோட இரைச்சல் மட்டுமே இருந்துச்சு, என்கிட்ட பேசுறவங்கள கேட்க தொடங்கினேன். தினமும், சாதாரண மனுசங்கள்ல இருந்து பணக்காரங்க வரைக்கும் எல்லாருடைய குரலையும் கேட்டேன். கேட்டபடியே தொடர்ந்தேன்..

ஒரு விவசாயி வந்தார், என் நிலத்துல இது மட்டுந்தான் மிஞ்சிருக்குது என்றார். Bhima Yojna திட்டத்தோட பலன் கிடைச்சதா?னு கேட்டேன், பணக்காரனுக புடுங்கிட்டானுகனு சொன்னாரு. அவருடைய நெஞ்சிலிருந்த பாரம் என் நெஞ்சுக்கு வந்திருச்சு. தன்னோட மனைவிகிட்ட பேசுறப்போ, என்ன அவமானத்தை அவர் அடைஞ்சிருப்பாரோ, அந்த அவமானத்தை எனக்கு கடத்திட்டு போய்ட்டாரு. அதற்கு பின்னாடி, யாத்திரையோட தன்மை மாறிடுச்சு. அதற்கு பின்னாடி, என்னோட பேசுற மனுசனோட குரல் மட்டுமே கேட்க தொடங்குச்சு. அவரோட வலி, அவரோட சோகம் என்னுடையதாக மாறிவிட்டது.

சகோதர, சகோதரிகளே… சிலர் சொல்வாங்க.. சில நாடும்பாங்க, பல்வேறு மொழிம்பாங்க, இது மண்ம்பாங்க, இது மதம்னு சொல்வாங்க, தங்கம், வெள்ளின்னு சொல்வாங்க… ஆனா, இது தேசத்தின் குரல்..

நம்முடைய மனதில் இருக்கும் திமிர், பேராசை, போன்றவற்றை விலக்கி வைத்தால்தான், இந்தியாவின் குரல் கேட்க முடியும்,நான் ஏன் இதை நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வைக்கிறேன் என்று தோன்றலாம்..

சகோதர, சகோதரிகளே… இந்த நாட்டின் குடிமக்கள் அனைவரின் குரல்தான் இந்தியா, அதை கேட்க திமிரை அடக்க வேண்டும். சில நாட்களுக்கு முன்னர் நான் மணிப்பூர் சென்றேன்.. பிரதமர் செல்லவில்லை, ஏனென்றால், அவருக்கு மணிப்பூர் இந்தியாவில் இல்லை. மணிப்பூர் என்ற ஒற்றை சொல்லை பயன்படுத்தினேன்.. மணிப்பூர் எஞ்சியிருக்கவில்லை. மணிப்பூரை இரண்டாக பிளந்துவிட்டீர்கள்.

மணிப்பூரின் நிவாரண முகாம்களுக்கு சென்றேன். பெண்களிடமும், குழந்தைகளிடமும் பேசினேன். ஆனால், பிரதமர் இதுவரை இவர்களிடம் பேசவில்லை. ஒரு பெண் என்னிடம் சொன்னார், "ஒரே ஒரு குழந்தைதான் என்னுடையது, என் கண் முன்னர் அவனை கொன்று போட்டுவிட்டார்கள். மொத்த இரவும் அந்த பிணத்தோடு படுத்திருந்தேன். பின்னர்தான் எனக்கு பயம் வந்தது. எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்தேன். என்னுடைய உடை மட்டும்தான் என்னிடம் இருக்கிறது." என்று.

இன்னொரு எடுத்துக்காட்டை சொல்கிறேன். என்ன நடந்தென்று கேட்டேன்? (பெண்ணின் வலியை கேட்க முடியாதா என்று கூச்சல்) என்ன நடந்ததென்று கேட்டேன். ஒரே நொடியில் துடி, துடிக்க தொட..

சபாநாயகர் அவர்களே.. இந்த கும்பல் மணிப்பூரில் இந்தியாவை கொன்று விட்டார்கள். இந்தியாவை கொலை செய்திருக்கிறது. கிரேன் ரெஜ்ஜு வந்து இதற்காக பேசுகிறார். இந்த (காவி) கும்பல் மணிப்பூரில் இந்தியாவை கொலை செய்திருக்கிறது. இந்தியாவின் குரலை கொலை செய்திருக்கிறது. பாரத மாதாவை கொலை செய்திருக்கிறது. நீங்கள் தேசபக்தர்கள் இல்லை. தேசத்துரோகிகள் இல்லை.. ஆகையால்தான், மோடி மணிப்பூர் போக மாட்டேன் என்கிறார்.

நீங்கள் பாரத மாதாவின் பாதுகாவலர் அல்ல; பாரதத்தாயின் கொலை காரர்கள். பாரத மாதாவை பற்றி பேசும் போது கவனமாக பேச வேண்டும். என் தாயை கொலை செய்திருக்கிறார்கள். தினமும் தொடர்ந்து செய்கிறார்கள். இந்திய இராணுவம் நினைத்தால் ஒரே நாளில் இதை செய்ய முடியும்; இந்தியாவின் குரல் உங்களுக்கு கேட்கவில்லை.

மேகநாதன், கும்பகர்ணன் ஆகிய இருவரின் பேச்சை மட்டும்தான் ராவணன் கேட்டான். மோடியும், அமித் ஷா மற்றும் அதானி ஆகிய இருவரின் பேச்சை மட்டும்தான் கேட்கிறார். இலங்கையை அனுமான் எரிக்கவில்லை; இராவணனின் அகங்காரம்தான் எரித்திருக்கிறது. மொத்த நாட்டிலும் மண்ணெண்ணெய் வீசியெறிகிரீறீர்கள். இந்தியாவை பற்ற வைக்கிறீர்கள், பாரத மாதாவை கொலை செய்கிறீர்கள்

Also Read: ”மத வெறுப்பு அரசியலை நாடெங்கும் பரப்பிய கொடுங்கோலர்களைத் தூக்கி எறியுங்கள்” : சிலந்தி!