Politics
”பா.ஜ.கவின் வெறுப்பு அரசியல் படுதோல்வி அடைந்துள்ளது : CPI மாநிலச் செயலாளர் முத்தரசன்!
ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு உச்சநீதிமன்றத்தின் இடைக்கால தடை மூலம் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளது. வெறுப்பு அரசியல் படுதோல்வி அடைந்துள்ளது என சிபிஐ முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர் ராகுல்காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதிநீக்கத்திற்கு உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (04.08.2023) இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அவர் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட அனுமதிக்க வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கை எழுந்தது. இதனடிப்படையில் ராகுல்காந்தி மீண்டும் வயநாடு நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக செயல்படலாம் என இன்று மக்களவைச் செயலகம் (07.08.2023) அறிவித்திருக்கிறது.
ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டை விசாரித்த சூரத் பெருநகர நீதித்துறை நடுவர்மன்றம் மார்ச் 23 ஆம் தேதி வழங்கிய தண்டனை அதீதமானது. உள்நோக்கம் கொண்டது என்பதையும், இந்த தீர்ப்பை எதிர்த்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் மற்றும் குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி செய்து கொண்ட மேல்முறையீட்டு மனுவிற்கு நேர்மையான முறையில் நியாயம் வழங்கப்படவில்லை என்றும் கருத்துகள் வெளியாகியிருப்பது பாஜக ஒன்றிய அரசின் பழிவாங்கும் அரசியலின் வன்மத்தை வெளிப்படுத்தியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இடைக்கால தடை மூலம் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளது. வெறுப்பு அரசியல் படுதோல்வி அடைந்துள்ளது.
இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“குதிரைபேரத்தில் விஜய் A1 குற்றவாளி” : தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் பேட்டி!
-
நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள் நான்கு கேள்விகளுக்கு பதிலுண்டா? : விஜய்க்கு, தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி
-
தங்க மோதிரம் என்ன விஜய் வீட்டு பணமா? : முரசொலி தலையங்கம் அடுக்கடுக்காக கேள்வி!
-
மதுராந்தகம் தொகுதி மக்களுக்காக.. மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய செய்தி.. தவெக-வை ஓட்டால் விரட்டுங்கள்!
-
திமுக தலைவர் வெளியிட்ட வீடியோ.. தாராபுரம் தொகுதி வாக்காளர்களே.. உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்!