Politics
மணிப்பூர் விவகாரம்: அதிகாரத்தை வைத்துக்கொண்டு மௌனம் சாதிக்கிறார் பிரதமர் மோடி - திருச்சி சிவா MP ஆவேசம்!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் இன்று கூடியது. காலை 11 மணிக்கு தொடங்கியவுடன் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் பிங்பகல் 2 மணிக்கு மக்களவை கூடிய போது மணிப்பூர் கலவரம் மற்றும் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து பிரதமர் மோடி பதில் அளிக்க வலியுறுத்தி திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தினர்.
ஆனால் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்காத மக்களவை சபாநாயகர் அவை நாள் முழுவதும் ஒத்திவைத்தி வைத்தார். அதேவேளையில் மாநிலங்களவையிலும் இதே பிரச்சனையை எழுப்பி எதிர்கட்சிகள் முழக்கமிட்டன. மாநிலங்களவை தலைவர் இருக்கையின் அருகே திரண்ட எதிர்கட்சி எம்.பி.க்கள் மணிப்பூர் விவகாரத்தில் ஒன்றிய அரசு பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனால் அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் பிற்பகல் இரண்டு மணிக்கு கூடியது. தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிலவியதால் நாளை காலை 11 மணி வரை மாநிலங்களவையை ஒத்திவைப்பதாக அவை தலைவர் ஜெக்தீப் தங்கர் அறிவித்தார். இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.
இருஅவைகளும் முடங்கிய பின்னர் மாநிலங்களவை தி.மு.க. குழுத் தலைவர் திருச்சி சிவா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”மணிப்பூர் வன்முறையின் போது, பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். மணிப்பூர் விவகாரம் குறித்து 75 நாட்களுக்குப் பிறகு தற்போதுதான் கருத்து தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. ஆனால் நாடாளுமன்றத்துக்கு வந்து பிரதமர் பதிலளிக்க தயங்குவது ஏன்?
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி அறிக்கை சமர்பிக்கும் வரை, நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்புவோம். அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு பிரதமர் மவுனம் சாதிப்பது வேதனையளிக்கிறது. மணிப்பூர் விவகாரம், ஆளுநர் அத்துமீறல் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டது. பா.ஜ.க. அல்லாத மற்ற அனைத்து கட்சிகளும் வலியுறுத்தியபின்பும், அனுமதி மறுக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
100-வது நாளை நெருங்கும் பிக்பாஸ் வீடு; கராசார பொங்கல் விருந்துக்கு தயாராகும் போட்டியாளர்கள்!
-
90 அணைகளை கண்காணிக்க : ஒருங்கிணைந்த மேலாண்மை மைய கட்டடத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
பொங்கல் திருநாள்; 34,087 சிறப்பு பேருந்துகள் இயக்கம் : உங்க ஊர் பேருந்து எங்கே நிற்கும் தெரியுமா?
-
திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான தீர்ப்பு : அமைச்சர் ரகுபதி பேட்டி!
-
”உங்க கனவை சொல்லுங்கள்” தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் : அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன முக்கிய தகவல்!