Politics
"எங்கள் நடவடிக்கை சிரமமாக இருந்தால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்" -பாஜகவுக்கு கர்நாடக அமைச்சர் பதிலடி !
கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 13 -ம் தேதி இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
135 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸுக்கு நாடு முழுவதுமுள்ள அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த வெற்றி வரும் நாடாளுமன்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பாஜக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் இதில் முக்கியமாக பாஜகவை சேர்ந்த 14 அமைச்சர்கள் தங்கள் தொகுதியில் பெரும் தோல்வியை தழுவினர். சில இடங்களில் டெபாசிட்டையும் இழந்தனர்.
காங்கிரஸ் கட்சியின் வெற்றியை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவையும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் பொறுப்பேற்றனர். அதோடு எம்.பி.பாட்டீல், பரமேஸ்வர், பிரியங் கார்கே, முனியப்பா, ஜமீர் அகமதுகான், கே.ஜே.ஜார்ஜ் ,ராமலிங்க ரெட்டி, சதீஷ் ஜராகிகோலி ஆகிய 8 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்ததும் பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் விரோத திட்டங்களை திரும்பப்பெற அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாங்கள் எடுக்கும் நடவடிக்கை பாஜகவுக்கு சிரமமாக இருந்தால், அவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லட்டும் என கர்நாடக அமைச்சரும் காங்கிரஸ் தேசிய செயலாளர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகனுமான பிரியங் கார்கே கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "ஒருவேளை கர்நாடகாவில் அமைதி சீர்குலைக்கப்பட்டால் அதை செய்வது பஜ்ரங் தளா? ஆர்.எஸ்.எஸ்ஸா என்பதையெல்லாம் பார்க்க மாட்டோம், சட்டம் கையில் எடுக்கப்பட்டால் அப்போதெல்லாம் தடையும் கூடவே வரும். அது ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தள் அல்லது யாராக இருந்தாலும் சரி! ஒருவேளை பாஜக-வுக்கு இதெல்லாம் சிரமமாக இருந்தால், அவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லட்டும்” என்று ஆக்ரோஷமாக கூறியுள்ளார்.
Also Read
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!
-
TVK Fails... ! ஆட்சியே அமைக்கவில்லை அதற்குள் : த.வெ.க-வினரின் மூன்று சம்பங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி!
-
ரவுடிபோல் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய த.வெ.க MLA : பொதுமக்கள் அதிர்ச்சி!