Politics
அப்போ PayCM,, இப்போ CryPM - பொம்மையைத் தொடர்ந்து சிக்கிய மோடி.. காங்கிரஸ் வியூகத்தால் அதிர்ச்சியில் பாஜக!
கர்நாடக மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இம்மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். கடந்த சில மாதங்களாகவே கர்நாடகாவில் மதமோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் இஸ்லாமியர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கொண்டு வருகின்றனர்.
மேலும் அம்மாநில அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதை பாஜக சட்டமன்ற உறுப்பினர்களே இந்த புகார்களை எழுப்பி வருகின்றனர். அதிலும் சில நாட்களில் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு கருத்துக்கணிப்புகளில் ஆளும் பாஜக தோல்வியடைந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.
இதனால் பாஜக மேலிடம் அதிர்ச்சியில் உறைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தோடு பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், பாஜகவின் முக்கிய தலைவர்கள் சர்ச்சையில் சிக்கிக்கொள்வதும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இது தவிர முக்கிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பு கொடுக்காத நிலையில் அவர்கள் அங்கிருந்து விலகுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முக்கிய தலைவர்கள், எம்.எல்.ஏக்கள் பாஜகவிலிருந்து விலகியுள்ள நிலையில் தற்போது அது பாஜகவுக்கு பெரும் நெருக்கடியை அளித்து வருகிறது.
தேர்தலுக்கு முன்னர் கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் அனைத்து டெண்டர்களிலும் 40% கமிஷன் வாங்கும் பாஜகவினரை கிண்டல் செய்யும் விதமாக 'PayCM - பே சிஎம்' என்ற 'க்யூ ஆர் கோடு' ஒன்றை உருவாக்கி அதனை வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தனர். அந்த க்யூ ஆர் கோடினை ஸ்கேன் செய்தால் பாஜகவினர் ஊழல்கள் வெளியாகும் வண்ணம் அதனை வடிவமைத்திருந்தனர்.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் கர்நாடகா வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, ''என்னை 91 முறை காங்கிரஸ் கட்சி அவமானப்படுத்தியுள்ளது என அழாத குறையாக பேசியிருந்தார். இதனை கிண்டல் செய்யும் விதமாக காங்கிரஸ் கட்சியினர், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, 'CryPM' என்ற புதிய பிரசாரத்தைத் தொடங்கியிருக்கின்றனர். ட்விட்டரில் 'CryPM' என அச்சிடப்பட்ட போஸ்டர்களை இளைஞர் காங்கிரஸ் வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், இதனை மாநிலம் முழுவதும் போஸ்டர் அடித்து ஓட்டப்போவதாகவும் காங்கிரஸ் கட்சியினர் கூறியுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Also Read
-
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிட்டது ஏன்? : பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!
-
“தந்தை பெரியார், அம்பேத்கர் பெயர் நீக்கம் என்பது ஒரு திட்டமிட்டச் செயல்!”: மு.வீரபாண்டியன் கடும் கண்டனம்!