Politics
27.73 கோடி ஊழியர்களின் PF சேமிப்புக்கு ஆபத்து.. அதானியின் மோசடியால் பாதிக்கப்பட்ட மாத சம்பளக்காரர்கள் !
அதானி குழும நிறுவனங்கள் வரவு - செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹிண்டன்பர்க் ரிசர்ச் எல்எல்சி என்ற ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டியது. பங்குச்சந்தையிலும் முறைகேட்டில் ஈடுபட்டதன் மூலமே தம் நிறுவனப் பங்குகள் விலை அதானி குழுமம் அதிகரித்துள்ளது என்றும் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.
அதேபோல் கரீபியன் நாடுகள், மோரீஷியஸ், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் போலி நிறுவனங்களை அதானி நடத்தி வருகிறார். அரசாங்கம் மற்றும் சர்வதேச நிறுவனங்களில் உதவியுடனே அந்த மோசடிகள் நடந்துள்ளது என பகிரங்கமாகவே ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் கடும் சரிவை சந்தித்தன. இதன் காரணமாக அதானி நிறுவனத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் சரிவை சந்தித்துள்ளது. இதனால் அதானி உலக பணக்காரர் வரிசையில் 3-வது இடத்தில் இருந்து 22-வது இடத்துக்கு சரிந்துள்ளார். அவரது சொத்துமதிப்பு பல லட்சம் கோடி சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதானி நிறுவன பங்குகளின் இந்த சரிவு காரணமாக அதில் முதலீடு செய்திருந்த LIC நிறுவனமும் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது. அதானியின் நிறுவனங்களான அதானி டோட்டல் கேஸ், அதானி என்டர்ப்ரைசஸ் , அதானி போர்ட்ஸ் , அதானி க்ரீன் எனர்ஜி, ஏசிசி,அதானி ட்ரான்ஸ்மிஷன் போன்ற நிறுவனங்களில் மோடி ஆட்சிக்கு வந்தபின்னர் LIC நிறுவனம் முதலீடு செய்திருந்தது.
அதானியின் நிறுவனங்களில் LIC நிறுவனம் ரூ.30,127 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தது. இதன் மதிப்பு ஜனவரி 24 ஆம் தேதி 72,193.87 கோடி ரூபாயாக இருந்த நிலையில் தற்போது வரை அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு குறைந்து வருவதால் தற்போது இதன் மதிப்பு ரூ.26,861.88 கோடியாக சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அதானி நிறுவனத்தின் முதலீடு செய்த முதலீட்டு தொகையை விட அதிக நஷ்டம் LIC-க்கு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் உள்ள ஊழியர்களின் பி.எப் பணத்தின் மதிப்பும் அதானியால் குறைந்துள்ள அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள 27.73 கோடி ஊழியர்களின் பி. எப் சேமிப்பு பணத்தை EPFO அமைப்பு நிர்வகித்து வருகிறது. அந்த தொகையில் 1.57 லட்சம் கோடி அளவுக்கு ஷேர் மார்க்கெட்டில் (ETF ) வழியாக முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.
அதானியின் நிறுவனங்களான அதானி என்டர்ப்ரைஸ், அதானி போர்ட் பங்குகளிலும் EPFO அமைப்பு கணிசமான பி.எப் பணத்தை முதலீடு செய்துள்ளது. இந்த நிலையில், தற்போது அதானியின் நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள இழப்பு காரணமாக இந்த பி.எப் பண முதலீட்டு பணமும் தனது மதிப்பை இழந்துள்ளது.
ஏற்கனவே தற்போது பி எப் வட்டி விகிதம் 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் 8.1%-மாக குறைந்துள்ள நிலையில், அதானி நிறுவனங்களில் செய்துள்ள முதலீட்டு இழப்பு காரணமாக வட்டிவிகிதம் மேலும் குறைய வாய்ப்புள்ளது. இங்கு பலர் அதானி யின் முறைகேடுகள் குறித்த கண்டும் காணாமல் இருக்கும் நிலையில் அவர்களின் பி.எப் தொகையும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”