Politics
மோடி திறந்துவைத்து வெறும் மூன்றே நாளில் சேதமடைந்த அதிவிரைவு சாலை.. காட்டமாக விமர்சிக்கும் இணையவாசிகள் !
கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை இருந்து வருகிறார். அங்கு பெங்களூரு மற்றும் மைசூருவை இணைக்கும் 10-வழி விரைவுச்சாலை பணிகள் இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்பட்டது.
அப்போது பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், நாட்டை பாஜக முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்வதாகவும் கூறியிருந்தார். ஆனால், மோடி திறந்தவந்த அந்த திட்டம் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது 2018ம் ஆண்டு கொண்டுவந்த திட்டம் என்பதும் அப்போதே அதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் தொடங்கப்பட்டதும் தற்போது தெரியவந்துள்ளது.
மேலும், அப்போது ரூ.6,420 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்ட சாலை தற்போது பாஜக ஆட்சியில் 10,000 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டதாகவும், இதில் ஊழல் நடந்துள்ளதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், 118 கிமீ தொலைவு கொண்ட இந்த சாலையில் 21 கிமீ அளவிற்கு பல்வேறு இடங்களில் பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.
கர்நாடகாவில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரவுள்ள நிலையில், தேர்தலுக்காக முடிக்கப்படாத சாலை திறக்கப்பட்டுள்ளதாகவும், இது பாஜகவின் தேர்தல் அரசியல் என்றும் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும், இது தொடர்பான புகைப்படமும் இணையத்தில் பரவி வருகிறது.
இந்த நிலையில், தற்போது மோடி திறந்து வைத்த இந்த சாலை வெறும் 3 நாளில் சேதமடைந்துள்ள புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு இந்த பகுதியில் ஒரு லாரி கவிழ்ந்த நிலையில் அதே இடத்தில் தற்போது சேதம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அவசரகதியில் இந்த சாலை திறக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், இந்த பகுதியில் பல்வேறு இடங்களில் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்பட்டதாகவும், சிறு விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, இந்திய சாலை (ஐஆர்சி) வகுத்துள்ள தரத்தின்படி நெடுஞ்சாலை அமைக்கப்படவில்லை என்றும் தரம் குறைந்த பொருட்களை வைத்து இந்த சாலை அமைக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
Also Read
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
அரசு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணாக்கர் சேர்க்கை... அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அறிவிப்பு!