Politics

‘என்ன அண்ணே.. உங்களை உள்ளயே விடலயாமே?’ : உண்மையை சொன்ன meme கிரியேட்டரை பிளாக் செய்த பாஜக நிர்வாகி !

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் உள்ள காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பட்டம் பெற்ற மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் மற்றும் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த பிரதமர் மோடியை பா.ஜ.க தொண்டர்கள் வரவேற்றனர். அப்போது பா.ஜ.க தொண்டர்களுடன் சேர்ந்து பிரதமர் மோடியைக் கையசைத்து வரவேற்றார் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை.

இதையடுத்து அண்ணாமலையின் ஆதரவாளர்கள் இந்த புகைப்படத்தை சமூகவலைதளங்களில் பதிவிட்டு, கட்சி தொண்டர்களுடன் இணைந்து நடக்கும் ஒரு தலைவர் இங்கே இருக்கிறார் என அவரை புகழ்பாடி வருகின்றனர். ஆனால் ஒரு கட்சியின் தலைவர் என்றால் பிரதமர் உடன் செல்வதுதானே அழகு. அதானே வழக்கம்.

இதனைத் தொடர்ந்து 'அண்ணே உங்களை உள்ளே விடலையா' என இணைய வாசிகள் பலரும் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையைக் கிண்டல் அடித்து மீம் வெளியிட்டு வருகிறனர். இப்படி ஜேம்ஸ் ஸ்டான்லி என்பவரும், பா.ஜ.க நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி வெளியிட்டிருந்த பதிவு ஒன்றிற்குப் பதிலளித்திருந்தார்.

அதில், 'உங்கள உள்ளேயே விடலயாமே' என கிண்டல் செய்திருந்தார். இதைப்பார்த்து கடுப்பான அமர் பிரசாத் ரெட்டி உடனே தனது நட்பு வட்டத்திலிருந்து ஜேம்ஸ் ஸ்டான்லி கணக்கை பிளாக் செய்துள்ளார்.

Also Read: "உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட் மக்களுக்காக பேசட்டும்".. வாழ்த்திய முரசொலி!