Politics
“நான் தயார்.. இடத்தையும், நேரத்தையும் அறிவிக்கட்டும்” : பொன்.ராதாகிருஷ்ணனுக்கு சவால் விடுத்த அமைச்சர் !
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் மக்கள் தீர்வுதளம் நிகழ்ச்சியில் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு குழித்துறை நகராட்சிக்குட்பட்ட பொதுமக்களிடம் கோரிக்கைமனுக்களை பெற்றார்.
அதைத்தொடர்த்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், கோவை கார் வெடிப்பை பொறுத்தவரையில் விசாரணை தீவிரமாக நடைபெறுகிறது. இதை அரசியலாக்க முயல்கிறார்கள். தீவிரவாதத்தை ஒருபோதும் தி.மு.க ஏற்றுக்கொள்ளாது. மூன்று முறை தடை செய்யபட்ட இயக்கம் ஆர்.எஸ்.எஸ்.
இவர்களின் தீவிரவாத நடவடிக்கைகள் பற்றி மக்களிடம் எடுத்து கூறவேண்டிய கடமை தி.மு.க.விற்கு உள்ளது. ISIS தீவிரவாதம் உட்பட எந்த தீவிரவாதமாக இருந்தாலும் இரும்பு கரங்கொண்டு முதல்வர் தீவிரவாதத்தை அடக்குவார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் பல்வேறு குளறுபடிகளை செய்துள்ளார். இது பற்றி பொதுவிவாதத்திற்கு எப்போதும் நான் தயார் அதற்கான இடத்தையும், நேரத்தையும் அவர்கள் தெரிவிக்கட்டும்.
ஆளுநர் ஒரு தவறான வழிகாட்டுதலை பின்பற்றி வருகிறார். தமிழகம் மட்டுமல்லாது, கேரளா, தெலுங்கான உள்ளாட்ட பாஜக ஆளாத மாநிலங்களில் பொதுமக்கள் குற்றம் சாட்டிவருகின்றனர். ஆளுநர்களை மாநில அரசுக்கு உதவ அனுப்பியுள்ளார்களா? அல்லது குழப்பத்தை ஏற்படுத்த அனுப்பியுள்ளார்களா? ஆளுநர்களின் செயல்பாடு பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் ஒரு விதமாகவும், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஒருவிதமாகவும் உள்ளது.
பத்திரிக்கையாளர்கள் இது குறித்து வருத்தபடவேண்டாம். ஒருவர் தன்னை வைத்துதான் மற்றவர்களை ஒப்பிடுவார்கள். அவரும் தன்னைதானே குரங்கு” என கூறியிருக்கிறார் என தெரிவித்தார்.
Also Read
-
“சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?” : மு.க.ஸ்டாலின் கேள்வி!
-
ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை குற்றங்கள்! : இம்மி அளவும் வாய் திறக்காத முதலமைச்சர் விஜய்!
-
“காவிரி நீரை மறந்துவிட வேண்டியது தான்!” : த.வெ.க ஆட்சிக்கு முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
“ஏழை மாணவர்களின் பசி போக்கிய காலை உணவுத் திட்டம்.. திராவிட நாயகர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வை”
-
இது பற்றி பேசக்கூடாது என்றால் என்ன நியாயம்? : த.வெ.க அரசுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேள்வி!