Politics
இந்தி எதிர்ப்பு போராட்டம் : "நாங்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் அல்ல.." - அமைச்சர் பொன்முடி !
பா.ஜ.க ஆட்சிக்கு வந்த நாள் முதல் மக்களுக்கு பல இன்னல்கள் கொடுத்து வருகின்றன. மேலும் மாநிலங்களின் உரிமைகள், விவசாய பிரச்னை, பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட விஷயங்களில் பல கேடு விளைவிக்கும் செயல்களை முன்னெடுத்து வருகிறது.
அதில் ஒன்று தான் 'புதிய கல்வி கொள்கை'. ஒன்றிய அரசு இந்த கல்விக் கொள்கை மூலம் அனைத்து மாநிலங்களிலும் இந்தி மொழியை திணிக்க முயன்று வருகிறது. இதனை கண்டித்து பல்வேறும் மாநிலங்களின் எதிர்க்கட்சிகள் தங்கள் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றன.
குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்தி திணிப்புக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. அதோடு அண்மையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான நாடாளுமன்ற குழு இந்தி மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பரிந்துரையை குடியரசு தலைவரிடம் அளித்துள்ளது. அதில் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி என்ற நோக்கமும் இடம்பெற்றுள்ளது.
இதற்கு தற்போது தேசிய அளவில் பல்வேறு மாநிலங்கள் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றன. மேலும் மேற்கு வங்கம் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை எடுத்திருக்கும் நிலையில், கேரள முதல்வர் இந்தி திணிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழ்நாடு திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் நாளை (15.10.2022) இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளதாக சேப்பாக்கம் எம்.எல்.ஏ-வும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது நாளை தமிழ்நாடு முழுவதும் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "நாளை தமிழ்நாடு முழுவதும் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெறும். மீண்டும் வரலாறு திரும்பாமல் இருக்கும் சூழல் ஏற்பட வேண்டும். இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம், இந்தி மொழியை அல்ல. நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல.
மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பேராசிரியர்களுக்கான ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்ட விவகாரத்தில் ரூ.23.20 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளதது. நிரந்தர பேராசிரியர்கள்,கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்கும் நடைமுறை விரைவில் தொடங்கும். உரிய தகுதி பெற்றவர்களே பேராசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள்" என்றார்.
Also Read
-
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்தை கண்டு ஒப்பாரி ஓலமிடும் பழனிசாமி : அமைச்சர் ரகுபதிக்கு பதிலடி!
-
திண்டுக்கல் மாவட்டத்தில் 2,62,864 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்!
-
“நீங்கள் மற்றவர்களுக்கு Inspire ஆக இருக்க வேண்டும்”: மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000! : நாளை (ஜன.8) தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“Very sorry உங்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!