Politics

“பா.ஜ.க-வின் ஏஜென்ட்டாக செயல்படும் ஆளுநர் RN.ரவி.. உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும்” : துரை வைகோ ஆவேசம்!

ம.தி.மு.க தலைமை நிலைய செயலாளர் துரைவைகோ தேனியில் "மாமனிதன் வைகோ" ஆவணப்படத்தை கட்சி தொண்டர்களுடன் திரையரங்கில் பார்த்தார். அதன் பின்னர் நடைபெற்ற செய்திகள் சந்திப்பில், திருக்குறள் குறித்து தமிழக ஆளுநரின் பேச்சு குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த அவர் தமிழக ஆளுநர் பா.ஜ.க.வின் பிரதிநிதியாகவே செயல்பட்டு வருகிறார். அவர் ஆளுநராக செயல்படாமல் அரசியல் செய்கிறார். இனியும் பா.ஜ.க-வின் ஏஜென்ட்டாக ஆளுநர் செயல்படக்கூடாது என தெரிவித்தார்.

திருக்குறளைப் பற்றிய ஆழ்ந்த ஞானம் அவருக்கு கிடையாது - இந்துத்துவா கருத்துக்களை தமிழகத்தில் எப்படியும் திணித்து விட வேண்டும் என்று சங்க பரிவார் இயக்கங்கள் முயற்சி செய்கின்றனர், அதற்கு உறுதுணையாக ஆளுநர் ஆர்.என் ரவியும் பேசுகிறார்.

திருக்குறளை பற்றி ஆல்பார்ட் ஸ்விட்சர்ரை விட ஆராய்ச்சி செய்துவிட முடியாது அவரே கூறியுள்ளார். உலகில் இப்படி ஒரு பொதுவான நூல் இல்லை. நோபல் பரிசு பெற்ற அவரே திருக்குறள் குறித்து கூறியிருக்கிறார். ஜி.யூ போப்பும் திருக்குறளை சரியாக மொழிபெயர்த்திருக்கிறார். ஆனால், இங்கு இருக்கிற கூட்டம் திட்டமிட்டு பேசி வருகின்றனர். அதற்கு ஆளுநர் துணை போவது மிகவும் துரதிஷ்டமான செயலாகும்.

தமிழக அரசு அனுப்பி உள்ள 14 சட்ட மசோதாக்களுக்கு இதுவரை ஒப்புதல் வழங்காமல் உள்ளனர். தமிழக அரசின் திட்டங்களை ஆளுநர் முடக்க முயற்சி செய்கிறார்" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: தனியார் காப்பகத்தில் உயிரிழந்த சிறுவர்கள் குடும்பத்திற்கும் ரூ. 2 லட்சம் நிவாரணம்.. முதலமைச்சர் உத்தரவு!