Politics
"ஒரு கப் சாயா குடிக்க வாங்க தலைவரே":அழைப்பை ஏற்று வீட்டிற்கு சென்று டீ குடித்த ராகுல் -திட்டமிடாத நிகழ்வு
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், இந்நாள் எம்.பி-யுமான ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 'இந்திய ஒற்றுமை பயணம்' பாதயாத்திரையை 150 நாட்கள் 12 மாநிலங்களில் மேற்கொள்கிறார். குமரியில் தொடங்கிய இந்த பாதயாத்திரையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 7-ம் தேதி தொடங்கி வைத்தார்.
குமரியில் தொடங்கிய தனது நடைபயணத்தை 4-வது நாளான நேற்றைய முன்தினம் தமிழகத்தில் முடித்து நேற்று கேரளாவில் தொடங்கினார். அங்கு 19 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ளவிருக்கும் ராகுல் காந்திக்கு கேரளா மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று ராகுல் காந்தி பயணம் மேற்கொண்ட போது வழிகளில் இருந்த டீ கடைக்காரர்கள், பொதுமக்கள் என பலரும் அவரை டீ குடிக்க அழைத்துள்ளனர். அவர்கள் அழைப்பை மறுக்க முடியாத ராகுல் காந்தி அதில் ஒரு குடும்பத்தினர் வீட்டிற்கு சென்று சாதாரண சேரில் அமர்ந்து அவர்களோடு சகஜமாய் பேசி சிரித்துக்கொண்டே டீயும் பிஸ்கட்டும் சாப்பிட்டார்.
இதனால் அந்த குடும்பத்தினர் பெருமகிழ்ச்சியில் உள்ளனர். ராகுல் காந்தி பேசிக்கொண்டே டீயும் - பிஸ்கட்டும் சாப்பிடுவது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
புதுக்கோட்டை மற்றும் திருச்சியில் கள ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! : முழு விவரம் உள்ளே!
-
நலம் காக்கும் ஸ்டாலின்: மருத்துவ முகாமில் தொடர்ந்து பயனுரும் வெளி மாநிலத்தவர்கள்- அமைச்சர் மா.சு பதிலடி!
-
நவம்பர் மாதம் முதல்... 4 மாவட்டங்களில் கேழ்வரகு கொள்முதல்.. அமைச்சர் சக்கரபாணி கூறுவது என்ன?
-
உடன்பிறப்பே வா : 2000+ கழக நிர்வாகிகளை சந்தித்த முதலமைச்சர்... கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு!
-
திமுக 75 அறிவுத்திருவிழா : ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!