Politics
”பேரு வெச்சீங்களே சோறு வெச்சீங்களா?” - எடப்படி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி!
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிமுக அரசின் திட்டங்களை திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி கொள்வதாக எடப்பாடி பழனிசாமி அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், சமச்சீர் புத்தகத்தில் ஸ்டிக்கர் ஒட்ட தொடங்கி வள்ளுவரையே மறைத்த ஆட்சி , கஜா புயல் நிவாரணத்தின் போது தனியார் தொண்டு நிறுவனங்கள் கொடுத்த நிவாரண பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டியது அதிமுக ஆட்சி. அதிமுகவை போன்று ஸ்டிக்கர் ஒட்டும் ஆட்சி திமுக ஆட்சி அல்ல.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் , ஜப்பான் பன்னாட்டு நிதி நிறுவன உதவியுடன் 95 விழுக்காடு பணிகள் நிறைவுற்ற நிலையில் ஆட்சி பொறுப்பிலிருந்து விலகிய நிலையில் பின்னர் வந்த அதிமுக ஆட்சி தாங்கள் கொண்டு வந்தது போலும் கோயம்பேடு பேருந்து நிலையம் , ஓமந்தூர் பல்நோக்கு மருத்துவமனை உள்ளிட்டவைகளில் அதிமுக ஸ்டிக்கர் ஒட்டி கொண்டது.
இன்றைக்கு திறக்க விருதுநகர் மருத்துவ கல்லூரியும் திமுக ஆட்சியில் அறிவித்ததுதான். நீங்கள் பெற்ற பிள்ளைக்கு பேர் வைத்தீர்களே சோறு வைத்தீர்களா என கேட்க தோன்றுகிறது
திமுக கோடி சூரியனுக்கு இணை. அதன் ஒளி உதிரி நட்சத்திரங்களுக்கு தேவைப்படுமே, தவிர திமுகவுக்கு தேவைப்படாது. விதைக்கிற நேரத்தில் வெளியூர் சென்று விட்டு அறுக்கும் நேரத்தில் அரிவாளை தூக்கி வரும் நிலை போல் உள்ளது எதிர்க்கட்சி தலைவரின் பேட்டி என அமைச்சர் தங்கம் தென்னரசு சாடியுள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!