Politics
MLA சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி; சிக்கிய பாஜக அமைச்சரின் உதவியாளர்; சென்னை கோர்ட் அதிரடி!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஜெயலட்சுமி நகரை சேர்ந்தவர் புவனேஸ்குமார் பா.ஜ.க. பிரமுகர். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது இவரது உறவினர் வசந்தி என்பவருக்கு ஆரணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட பா.ஜ.க. சார்பில் சீட் வாங்கி தருவதாக கூறி தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக இருந்த ஒன்றிய இணை அமைச்சர் கிஷன் ரெட்டியின் உதவியாளர் நரோத்தமன் ரூ.50 லட்சம் வாங்கி உள்ளார்.
ஆனால், வாக்குறுதி அளித்த படி சீட் வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திரும்ப கொடுக்காமல் ஏமாற்றி மிரட்டியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் நரோத்தமன் மீதும், மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக அவரது தந்தை டி.வி.பிரசாத் மீதும் சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
இந்த நிலையில் அவர்கள் இருவரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ஆர்.செல்வக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்க முதன்மை குற்றவியல் அரசு வழக்கறிஞர் தேவராஜ் ஆட்சேபம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, இருவரின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
Also Read
-
ரூ.110.92 கோடியில் துணைமின் நிலையம் : கொளத்தூரில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.2000 கோடி முதலீடு - 3000 பேருக்கு வேலை : Hitachi நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“ஒன்றிய அரசின் மனிதத்தன்மையற்ற செயல்” : புதிய EPFO விதிகளுக்கு கனிமொழி MP எதிர்ப்பு!
-
மக்களே உஷார் : தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை - வானிலை அப்டேட் இதோ!