kanimozhi m.p
Politics

“அதிமுக ஆட்சி எப்போது முடிவுக்கும் வரும் வீட்டுக்கு அனுப்பலாம் என மக்கள் காத்திருக்கிறார்கள்” -கனிமொழி MP

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை எதிர்த்து தூத்துக்குடியில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக திமுக மகளிரணி செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தூத்துக்குடி விமானநிலையம் வருகை தந்தார். அவருக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதா ஜீவன் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் வரவேற்பளித்தனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்பி, முதல்கட்ட பிரசார பயணம் நன்றாக இருந்தது. திமுக ஆட்சி பிடிப்பது உறுதி. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவதை தடுக்க முடியாது என்பது தெரிகிறது. இந்த அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும் என மக்கள் காத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு இல்லை. சுய உதவிக் குழுக்கள் கேட்பாரின்றி இருக்கிறது. இது போன்று பல்வேறு நிலைகளில் மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்.

Also Read: “அரசை செயல்படுத்துவது மு.க.ஸ்டாலின்; எடப்பாடி பழனிசாமி ஒரு ஜெராக்ஸ் முதல்வர்” - செந்தில்பாலாஜி MLA சாடல்!

இதனால் இந்த ஆட்சியை எப்போது வீட்டுக்கு அனுப்புவது என மக்கள் காத்திருக்கிறார்கள். பிரசாரத்துக்கு சென்ற இடங்களிலெல்லாம் இந்த அதிமுக ஆட்சி குறித்த புகார்கள்தான் அதிகம் வந்தது. அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளது இதன் மூலம் தெரிகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 5000 ரூபாய் வழங்க வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

கேஸ் விலை உயர்வு உள்ளிட்ட அனைத்து விலைகளும் உயர்ந்து உள்ளது இந்நிலையில் பொங்கலுக்கு 2,500 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு குடும்பத்திற்கு 5000 ரூபாய் வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் அது கண்டுகொள்ளவில்லை இந்த அதிமுக அரசு. நாடாளுமன்றத்தை பாஜக அரசு ஜனநாயக முறையில் நடத்த வேண்டும்.”

இவ்வாறு கனிமொழி எம்.பி கூறியுள்ளார்.

Also Read: “இன்னும் 5 மாதங்களில் தி.மு.க ஆட்சிக்கு வரும்; விவசாயிகளின் இன்னல்கள் தீரும்” - கனிமொழி எம்.பி உறுதி!