Politics

"உங்க 'ஜி' பத்திதான் பேசணும்னா ஏன் விவாதத்துக்கு வர்ற" - உதயநிதி ஸ்டாலின் ட்வீட் #Savejournalism

போலி பிரச்சாரங்கள், தனிமனித தாக்குதல், தவறுகளை பெருமைகளாக பேசுவது, எதிர்த்து பேசுபவர்களை தேச துரோகி என்பது. மூளையை கழற்றி வைத்துவிட்டு பா.ஜ.கவுக்கு ஆதரவாக பேசும் சங்கிகளின் செயல்முறை இது தான்.

மற்ற மாநிலங்களை விட திராவிட அரசியல் பேசும் விழிப்புணர்வு பெற்ற தமிழக மக்களிடம் இவர்களின் கூற்று எப்போதும் செல்லுபடியானதே இல்லை. நேரடியாக பேச ஒன்றுமில்லாததால் தான் இவர்கள் மூன்றாம் தர வழிகளை கையில் எடுக்கின்றனர்.

அதுவும் இவர்களின் அட்டூழியம் தற்போது எல்லை தாண்டத் தொடங்கியிருக்கிறது. புலனாய்வு என்ற பெயரில் ஒரு குப்பையை கொட்டியிருக்கிறார் மாரிதாஸ் என்னும் மரமண்டை. நியூஸ் 18 தமிழ் சேனலில் உள்ள ஊடகவியலாளர்கள் மீது போலிச் செய்திகளை கிளப்பியும், தனிமனித தாக்குதல் நடத்தியும், ஒருமையில் பேசியும், அவர்களின் குடும்ப பின்னணியை பற்றியும் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், இந்த ஊடகவியலாளர்கள் தேசத்துக்கு எதிரானவர்கள் என்று முடிவுக்கு எடுத்துச் சென்று, அவர்களை பணியில் இருந்து நீக்குமாறு, அந்த செய்தி நிறுவனத்தின் தலைமைக்கும் ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறாராம்.

இவரின் பேச்சை குரைக்கும் நாயை போல நாம் கடந்து சென்றாலும், ஊடகங்கள் மீது நேரடியாக தாக்குதல் நடத்துவது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றே பார்க்க வேண்டியிருக்கிறது. இவ்வேளையில், போலி பிரச்சாரங்கள் செய்யும் சங்கிகளுக்கு எதிராக கேள்வி கேட்கும் ஊடகங்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டிய நேரமிது. சமூக வலைதளங்களில் #savejournalism என்ற ஹாஷ்டேக்கில் மக்கள் ஊடகங்களுக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில், தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.அதில் " ‘எங்க ஜி பத்தி மட்டும்தான் பேசணும். எதிர்க்கருத்து-இடையூறு இல்லாம பேசணும். கத்திகத்தி பேசணும். வேதனையை சாதனைனு பேசணும். அந்துபோன ரீலை ரியல்னு பேசணும். மொத்தத்துல 24 மணிநேரமும் பேசணும்.’ ‘அதுக்கு நீ நேர்லதான் பேசணும். எதுக்கு விவாதத்துக்கு வர்ற!’#SaveJournalism #StandWithNews18TN" என தெரிவித்துள்ளார்.