Politics
நீலச்சட்டை பேரணிக்காக கோவையில் திரண்ட ஆயிரக்கணக்காண மக்கள்... ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!
பெரியாரிய அமைப்புகள், விடுதலை சிறுத்தைகள், திராவிடர் விடுதலை கழகம், மே 17 உள்ளிட்ட சுயமரியாதை இயக்கங்கள் பங்குபெறும் அம்பேத்கர் நீலச்சட்டை பேரணியும், சாதி ஒழிப்பு மாநாடும் கோயம்புத்தூரில் இன்று மாலை நடைபெறுகிறது.
கோவை அவினாசி சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே இருந்து பெரியாரிய மற்றும் அம்பேத்கரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் நீலச்சட்டை அணிந்தபடி பேரணியாக செல்லவுள்ளனர். பின்னர் வ.உ.சி. மைதானத்தில் சாதி ஒழிப்பு மாநாடு நடத்தப்பட உள்ளது. வி.சி.க தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.
2 மாதங்களுக்கு முன்பே நடைபெற வேண்டிய இந்த மாநாடும், பேரணியும் பா.ஜ.க போன்ற ஆதிக்கவாதிகளின் நெருக்கடியால் காலம் தாழ்த்தப்பட்டது.
பல ஆண்டுகளாக சாதிய கொடுமையால் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு விடிவு சொல்லும் நிகழ்வாக நீலச்சட்டை பேரணியும், மாநாடும் இருக்கும் என்பதால் அதனை அவர்கள் எதிர்த்து வந்தனர்.
ஆனால், சட்டப்போராட்டம் நடத்தி இதற்கான அனுமதியை நீதிமன்றம் வாயிலாக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் பெற்றுள்ளனர்.
கோவையில் நடைபெறும் இந்த நீலச்சட்டை பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு ட்விட்டரில் #AmbedkarBlueShirtRally என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்நிகழ்வில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு சாதியால் நிகழும் வன்கொடுமைகளுக்கு எதிராக குரலெழுப்பவுள்ளனர்.
Also Read
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!