Politics
“ரஜினி இஸ்லாமியர்களுக்காக இப்படித்தான் போராடுவார்” - ரஜினி முன் சொன்ன அறிவிப்புகள் என்னவானது?
நடிகர் ரஜினிகாந்த், இன்று காலை தன் வீட்டு வாசலில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது, “குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் கிடையாது. ஒருவேளை அப்படியொரு நிலை ஏற்பட்டால், இஸ்லாமியர்களுக்காக முதல் குரல் கொடுப்பேன்.” எனத் தெரிவித்தார்.
மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை அச்சுறுத்தும் விதமாகப் பேசிய ரஜினிகாந்துக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இஸ்லாமிய வெறுப்பைக் கையாண்டு வரும் பா.ஜ.க அரசுக்கு ஆதரவாக, குடியுரிமை சட்டத்தை ஆதரித்துப் பேசி வரும் ரஜினியின் பேச்சுகள் தண்ணீரில் எழுதப்படுபவை தான்.
இப்படி பல அறிவிப்புகளை வெளியிட்ட கணத்தோடு மறந்துவிட்டவர் ரஜினிகாந்த். 2002ம் ஆண்டு நதிநீர் இணைப்புக்கு ஒரு கோடி ரூபாய் வழங்குவேன் என அறிவித்தார். அது அறிவிப்போடு மட்டுமே நின்று போனது.
2004ம் ஆண்டு கும்பகோணம் தீ விபத்தில் பலியான குழந்தைகளின் குடும்பங்களுக்கு 12 லட்சம் கொடுப்பதாக அறிவித்தார். அந்த அறிவிப்பும் செய்தியோடு நின்றுபோனது; செயல்பாட்டுக்கு வரவில்லை.
2010ம் ஆண்டு தனது மகள் சௌந்தர்யாவின் திருமணத்தை முன்னிட்டு ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து வைப்பதாகத் தெரிவித்தார். பத்தாண்டு கடந்தாலும் விருந்து நடைபெற்றபாடில்லை.
அரசியலுக்கு வருவேன் என கபடி ஆடி வந்தாலும், 2017ம் ஆண்டின் இறுதியில் ரசிகர் மன்றக் கூட்டங்களை நடத்தி நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என்றார் ரஜினி. அதற்குப் பிறகு இந்திய அரசியலில் போர்ச் சூழல் வந்ததே தவிர ரஜினிக்கு போர் வரவில்லை.
சில நாட்களுக்கு முன்பு குடியுரிமை சட்டம் எனக் குறிப்பிடாமலேயே, போராட்டங்கள் தனக்கு வேதனை அளிப்பதாக ட்வீட் செய்தார். இன்றைக்கு, இஸ்லாமியர்களுக்காக முதல் குரல் கொடுப்பேன் என்றிருக்கிறார்.
முன்சொன்ன எதையும் பல்லாண்டுகள் கடந்தும் செய்ய முன்வராத ரஜினி இதை மட்டும் எப்படிச் செய்வார் என சமூக வலைதளத்தில் பலரும் விமர்சித்து வருகின்றனர். இது சினிமா அல்ல என்பதை ரசிகர்கள் உணர்ந்திருக்கிறார்கள்; ரஜினியும் உணரவேண்டும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பும்!
Also Read
-
இந்தியாவிலேயே முதல்முறை... சர்வதேச தரத்தில் கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம்: திறந்து வைத்தார் முதல்வர்!
-
“ஜி.டி.நாயுடுவை யாரும் நாயுடுவாக பார்க்கவில்லை...” - விமர்சனங்களுக்கு கி.வீரமணி பதிலடி!
-
"ஜி.டி.நாயுடு பெயர் முறையான வகையில் வைக்கப்பட்டுள்ளது"- அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் !
-
“தங்கத்தை விட கலைமாமணி விருதுக்குதான் மதிப்பு அதிகம்.. ஏனெனில்...” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
"நாடாளுமன்றத்தில் தற்போது முறையான விவாதமே நடைபெறவில்லை" - கனிமொழி எம்.பி. விமர்சனம் !