Politics
“ஏதாவது ஒரு தொகுதியில் வெற்றிபெற்ற பிறகு இப்படிப் பேசினால் பரவாயில்லை..” - தமிழிசைக்கு கனிமொழி பதிலடி!
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் கனிமொழி எம்.பி., தூத்துக்குடி மாவட்டம் தருவை குளத்தில் நடைபெறும் பெண்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.
பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மக்களவைத் தேர்தலில் தி.மு.க.வின் வாக்கு வித்தியாசத்தையும் தற்போதைய வாக்கு வித்தியாசத்தையும் பார்த்தால் இது தி.மு.க.வுக்கு தோல்விதான் என்று தமிழிசை தெரிவித்தது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த கனிமொழி, “ஏதாவது ஒரு தொகுதியில் பா.ஜ.க வெற்றிபெற்ற பிறகு அவர் இப்படிப் பேசினால் பரவாயில்லை” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “வேலூர் வெற்றி தாமதமாக வருவதற்குக் காரணம் என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். அங்கு பல சூழ்ச்சிகளின் காரணமாக தேர்தல் முன்னர் தடுத்து நிறுத்தப்பட்டது. இப்போது தேர்தல் நடத்தப்பட்டு அதில் தி.மு.க வெற்றி பெற்றுள்ளது.
தி.மு.க கூட்டணிக்குள் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. லடாக் பகுதிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வந்தது. அதை யாரும் எதிர்க்கவில்லை. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத்தான் தி.மு.க எதிர்க்கிறது.
தேர்தலில் தோல்வியடைந்த பிறகு அதை சரிக்கட்டப் பல காரணங்களைச் சொல்வது இயற்கையான ஒன்று. மேலும் தோல்வி இல்லையென்று சொல்வதற்கான காரணங்களைத் தேடுவதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் தி.மு.க பெற்ற வெற்றி என்பது யாரும் மறுக்கமுடியாத ஒன்று.
அ.தி.மு.க.வின் படிப்படியான தோல்விகளைக் கண்கூடாக அமைச்சர் ஜெயக்குமார் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதைத் தாண்டி தன்னுடைய மனதை ஆற்றுப்படுத்திக் கொள்வதற்காக அவர் சொல்வதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை” எனத் தெரிவித்தார்.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!