Politics
கர்நாடகாவில் கூட்டணி அரசை எவராலும் கவிழ்க்க முடியாது - அமைச்சர் டி.கே. சிவக்குமார் பேச்சு
கர்நாடக மாநில அரசியல் குழப்பம் உச்சத்தை தொட்ட நிலையில் நாளை மறுநாள் (ஜூலை 18) நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
இது தொடர்பாக பேசிய கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணி அரசு நிச்சயம் வெற்றி பெறும். அதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. காங்கிரஸ், ம.ஜ.த கூட்டணி அரசு தொடர்ந்து ஆட்சி புரியும்.
அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை சமாதானப்படுத்தும் நடவடிக்கைகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஆகையால் கர்நாடக கூட்டணி அரசை எவராலும் கவிழ்க்க முடியாது என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களை தவிர மற்ற அனைத்து கூட்டணி கட்சி உறுப்பினர்களும் எங்களுடனேயே உள்ளனர். அரசு கொறடா உத்தரவை எவரும் மீறவில்லை என தெரிவித்தார்.
Also Read
-
இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபாவுக்கு நூற்றாண்டு நினைவு மலர்... வெளியிட்டார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
கீழடி நம் தாய்மடி! பொருநை, தமிழரின் பெருமை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
அறிவுசார் தலைநகராகத் திகழும் தமிழ்நாடு : திராவிட மாடல் அரசின் தொலைநோக்கு சிந்தனைக்கு எடுத்துக்காட்டு!
-
“தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் ஐயப்பாட்டை எழுப்புகிறது” : வைகோ அறிக்கை!
-
புத்தக காதலர்களே தயாராகுங்கள் : ஜன. 8 ஆம் தேதி சென்னை புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்!