Politics
முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் சந்திரபாபு நாயுடு !
ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.ஆர்.எஸ். காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அம்மாநிலத்தை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது.
இந்நிலையில், கவர்னர் நரசிம்மனை சந்தித்த தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு தனது ராஜினாமா கடிதத்தை அவரிடம் ஒப்படைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த பொதுமக்களுக்கும் தேர்தலின் போது கடுமையாக உழைத்த கட்சி தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார். ஆந்திராவின் முதல் மந்திரியாக பதவியேற்கும் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் ஒடிசா முதல் மந்திரியாக மீண்டும் பதவியேற்கவுள்ள நவீன் பட்நாயக் ஆகியோருக்கு அவர் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?