Politics
தேர்தல் ஆணையத்தில் பிளவு... சுனில் அரோராவுக்கு எதிராக 2வது ஆணையர் போர்க்கொடி!
மக்களவைத் தேர்தலுக்கான 7ம் கட்ட வாக்குப்பதிவு நாளை (மே 19) 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது.
தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் மோடியும், பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி மக்களிடையே பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பாக, காங்கிரஸ் உள்ளிட்ட பல தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர். இந்த புகார்கள் மீது தேர்தல் ஆணையத்தின் மூவர் குழு முடிவெடுக்கும். இந்த குழுவில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா மற்றும் சுனில் சந்த்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மோடி மற்றும் அமித் ஷா மீதான இந்த புகார்களில் தவறில்லை என்று இந்த குழு அறிவித்தது. ஆனால், இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டது இல்லை என்று பின்னர் தகவல் வெளியானது. தேர்தல் ஆணையர் லவாசா விதிமீறல்கள் இருப்பதாக ஆட்சேபனம் தெரிவித்த போதும், மற்ற இரு ஆணையர்கள் விதிமீறல் இல்லை என்று கூறி புகாரை நிராகரித்துவிட்டனர். இது பல முறை தொடர்ந்தது. லவாசா கடும் அதிருப்தியில் இருந்தார்.
இந்நிலையில் தேர்தல் விதிமீறல் குறித்த கூட்டம் ஒன்றில் பங்கேற்பதை தவிர்த்துள்ளார். அதுமட்டுமில்லாமல், தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக அசோக் லவாசா பரபரப்பான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளது “மோடி, அமித்ஷா மீதான புகாரை நிராகரித்தது மட்டுமில்லாமல், அவர்கள் இருவர் மீதான எனது தரப்பு எதிர்ப்பு பதிவு செய்யப்படவில்லை” என குற்றஞ்சாட்டி உள்ளார். மேலும், தேர்தல் ஆணையம் விதிமுறைப்படி செயல்படவில்லை என்றும், அவ்வாறு செயல்படாவிடில் அடுத்தத்தடுத்த கூட்டங்களை தான் புறக்கணிக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார் அசோக் லவாசா.
தன்னாட்சி தன்மையுடன் செயல்படும் பல அரசு நிறுவனங்களுக்கு ஊடுருவிய மோடியின் பா.ஜ.க அரசு தேர்தல் ஆணையத்திலும் விட்டு வைக்கவில்லை. கடைசி கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையர்கள் இடையே உருவாகியுள்ள கருத்து வேறுபாடு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
- 
	    
	      
பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!
 - 
	    
	      
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
 - 
	    
	      
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!
 - 
	    
	      
”மக்கள் ஆதரவு இல்லாததால் வாக்குகளை திருடி வெற்றி பெற பார்க்கும் பாஜக” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
 - 
	    
	      
அ.தி.மு.கவில் இருந்து விலகிய பால் மனோஜ் பாண்டியன் : முதலமைச்சர் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்!