Politics

தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் - அபூபக்கர் எம்.எல்.ஏ பேட்டி 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் மற்றும் இராமநாதபுரம் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனி ஆகியோர் இன்று திமுக தலைவர் ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தனர். திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்று தெரிவித்தனர்.

சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் கூறியதாவது,

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி இராமநாதபுரம் வேட்பாளர் நவாஸ் கனி அவர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார் அதற்கு இன்று அவரை சந்தித்து நன்றி கூறினோம்.

தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டாலும் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக நிகழும், தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும். 4 தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம், என்றார்.