உணர்வோசை

இந்தியச் சமூகத்தில் கறுப்பு நிறம் தாழ்வாக பார்க்கப்பட முக்கிய காரணம் பார்ப்பனியமா ? பின்னணி என்ன ?

’வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்!’

கறுப்பு நிறம் மீதான ஒடுக்குமுறை பொதுவாக உலகெங்கிலும் இருக்கிறதென்றாலும் நம்மூரில் சற்று அதிகமாகவே இருக்கிறது. நம்மூரின் பெரும்பான்மை நம்பிக்கையைப் பொறுத்தவரை கறுப்பு என்பது அசிங்கம். வெள்ளை அல்லது சிவப்பு என்பது அழகு!

பெரும்பான்மையான ஆண்களுக்கு வெள்ளைத் தோல் பெண்கள் பிடிக்கக் காரணம் கறுப்பு நிறம் மீது கொண்டிருக்கும் ஒவ்வாமை என சொல்லலாம்.

உழைக்கும் வர்க்க ஆண்கள் என குறிப்பிட்டு சொல்ல முடியாது. எந்த மட்டத்து ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கறுப்புத் தோலுக்கு இரண்டாம் பட்சம்தான்.

பெண்களுக்கான தேர்வில் அவர்களுக்கு அதிகாரம் இருக்காதென்பதால் கறுப்பு ஆண்கள் தப்பிக்கிறார்கள். அவர்களின் விருப்பம் வைத்து எடை போட்டால் பெரும்பாலான பெண்களின் விருப்பம் வெள்ளைத் தோலாகதான் இருக்கிறது.

ஆண்களுக்கு தேர்வு செய்யும் அதிகாரம் இருப்பதால் வெள்ளைத் தோல் பெண்களே பிரதான தேர்வாக இருக்கிறார்கள்.

காரணம், இந்தியச் சமூகத்தைப் பொறுத்தவரை கறுப்பு நிறம் என்பது தாழ்வான நிறமாக இரு முக்கிய அதிகாரங்கள் நிறுவுகின்றன. பார்ப்பனியம், முதலாளித்துவம்!

பார்ப்பனர்களுக்கு வெள்ளைத் தோலே உயர்தரம் என்பதால், அவர்களால் ஊட்டி வளர்க்கப்படும் பார்ப்பனியவாதிகளுக்கும் அதுவே உயர்தரம் ஆகிறது. முதலாளித்துவம், கறுப்பு என்பது அழகின்மை என பிரசாரம் செய்வதால் அங்கும் வெள்ளைத் தோலே மேன்மை ஆகிறது.

எனவே gene pool-ல் மேன்மையான gene வெள்ளைத் தோல் gene-தான் என நம்பி அடுத்த தலைமுறையாக வெள்ளைத் தோலை உருவாக்க வேண்டுமென விரும்பி வெள்ளைத் தோல் இணையரை தேர்ந்தெடுக்கிறோம். விரும்புகிறோம்.

நம்மில் பலரையே எடுத்துக் கொள்ளுங்கள். கறுப்பாக ஒருவரும் வெளுப்பாக ஒருவரும் வந்து பேசினால் நாம் அதிகமாக வெளுப்பாக இருப்பவரை நோக்கிதான் பேசுவோம். முற்போக்கே பேசினாலும் ஆழ்மனதில் நாம் அப்படித்தான் ட்யூன் செய்யப்பட்டிருக்கிறோம்.

அத்தகைய புறக்கணிப்பை நான் அதிகம் அனுபவித்ததால் conscious ஆக என்னிடம் பேசுபவர்களிடம் பாரபட்சம் இருந்துவிடக் கூடாததென்ற விழிப்புடன் பேசுவேன். சொல்லப் போனால் முதலிடத்தை வெளுப்பாக இல்லாதவருக்கே அளிப்பேன்.

கறுப்பு நிறம் போன்ற பல cultural stereotyping நம்மிடம் உள்ளன.

பழங்குடிகளுடன் அதிக நெருக்கம் இருக்கும் மக்களின் இயல்பு இந்த நாகரிக உலகுக்கு ஒவ்வாத தன்மையே கொண்டிருக்கும். சத்தமாக பேசுவார்கள். பல நேரங்களில் reserved ஆக இருப்பார்கள். பேசினாலும் நேரடியாக பொட்டில் தெறிப்பது போல் பேசுவார்கள். முகத்தில் இலகுதன்மை இல்லாமல் இறுக்கம் இருக்கும்.

பழங்குடி தன்மையிலிருந்து விலகிச் செல்பவர்களை பாருங்கள். விலகிச் செல்லும் தூரத்துக்கு ஏற்ப போலித்தனம் சூடியிருப்பார்கள். போலியான புன்னகை, செயற்கையான உணர்ச்சிகள், அதீத பாவனைகள் போன்றவை.

இத்தகைய விஷயங்களை அவதானித்து போலிகளை தவிர்த்து உண்மைகளுடன் பழக conscious effort போட்டு நாம் நம்மின் பழக்கங்களையே மாற்ற வேண்டும்.

நமக்கு ஆதாரமான மரபு நிறத்தை புறக்கணிப்பது மட்டுமின்றி கீழாகவே நடத்துகிறோமெனில் எத்தனை செயற்கையான பூச்சு வாழ்க்கைக்குள் நாம் சிக்கியிருக்கோமெனப் பாருங்கள்!

Also Read: காதலுறவில் சுவாரஸ்யம் குறைகிறதா ? உறவு எப்போது சலிப்பை தரும்.. அதை தவிர்ப்பது எப்படி ?