உணர்வோசை
இலங்கையில் தமிழர் நல்வாழ்வுக்கு உடனடியாக செய்யவேண்டிய 17 அம்ச நடவடிக்கைகள்
இலங்கையில் இனப்படுகொலை நடந்து இன்றோடு 10 ஆண்டுகள் கடந்துவிட்டது. சிங்கள ராணுவம் முன்னெடுத்த போர் நடவடிக்கைகளில் எனும் இன அழித்தொழிப்பு நடவடிக்கையில், லட்சக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.
இந்த நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலை அது. இன்னமும் அந்த மண்ணில் தங்களது உடமைகளையும், ரத்த சொந்தங்களையும் இழந்துவாடும் மக்கள் ஏராளம். லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டு, அனாதைகளாகவும், அகதிகளாவும் ஆக்கப்பட்டதன் சுவடிகள் இன்னமும் அந்த மண்ணில் எஞ்சி உள்ளது.
இத்தனை பெரிய இனப்படுகொலைக்குப் பிறகும் அங்கு தமிழ் மக்கள் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை. அவர்களை முன்வைத்து தமிழ் மண்ணில் பொய் அரசியல்தான் நடக்கிறது.
ஈழத்தமிழ் மக்கள் தங்களது நல்வாழ்விற்கு பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றனர். 10 ஆண்டுகளைக் கடந்த நிலையில், அவர்களின் நல்வாழ்வுக்கு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய 17 அம்ச நடவடிக்கைகளாக ஊடகவியலாளர் திருமாவேலன் குறிப்பிட்டுள்ளதாவது :
1. தனித்தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு.
2. இனப்படுகொலைக்கான ஐநா மனித உரிமை ஆணைய விசாரணை.
3. ஈழத்தமிழர்களுக்கான உலகளாவிய அரசியல் அமைப்பு.
4. வடகிழக்கு மக்களின் வாழ்வுரிமை/ அரசியலுரிமை/ பொருளியலுரிமை/ பண்பாட்டுரிமை மீட்கப்படுதல்.
5. வடகிழக்கு தமிழர் தாயகம் என்ற நிலைநிறுத்தலுக்கு எதிரான அனைத்து செயல்பாடுகளையும் தடுத்தல்.
6. போரில் உறவுகளை இழந்தவர் குடும்பங்களுக்கான மறுவாழ்வு.
7. போராளிகளின் வாழ்வியல் கோரிக்கைகள்.
8. காணாமல் போனோர் கண்டுபிடிப்பு.
9. அனைத்து தமிழர்களும் விடுதலை.
10. இராணுவம் முழுமையாக விலக்கப்படுதல்.
11. சிங்களக்குடியேற்றம் தடுப்பு.
12. தமிழர் பகுதியில் செய்யப்பட்ட பவுத்த மயமாக்கல் நிறுத்தம்.
13. தன்னம்பிக்கை என்று புகுத்தப்படும் மதம்/ சுற்றுலா என நுழையும் கலாச்சாரக் கேடுகள்/ பாதுகாப்பு என்ற அடிப்படையில் புகுத்தப்பட்ட பயமுறுத்தல்களில் இருந்து மீட்சி.
14. தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு நிறைவான வாழ்க்கை.
15. தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் சித்ரவதை செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி.
16. பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை.
17. மானமும் அறிவும் வீரமும் விவேகமும்
இந்த 17 நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே மீண்டும் அம்மண்ணில் தமிழர்கள் நிம்மதியாகவும், அமைதியாகவும் வாழ முடியும். இந்த தீர்வை நாம் அனைவரும் சேர்ந்தே முன் எடுக்க வேண்டும்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!