murasoli thalayangam

“கடைந்தெடுத்த துரோகி பழனிசாமிக்கு கலைஞர் பெயரை உச்சரிக்க அருகதை கிடையாது!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!

திருநெல்வேலியில் உரையாற்றிய கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், உணர்ச்சிப் பிழம்பாக வெடித்து இருக்கிறார்...

“எனக்கு உயிர் கொடுத்து ஆளாக்கிய தலைவர் கலைஞரை நான் வீட்டுச் சிறையில் வைத்திருந்தேன் என்று நாக்கில் நரம்பில்லாமல் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

முதலமைச்சராக என்னுடைய செயல்பாடுகளை விமர்சிக்க எதிர்க்கட்சித் தலைவரான உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. தேர்தலில் அதை மக்கள் எடைபோட்டுப் பார்ப்பார்கள். உங்களுக்குத் தக்க பதிலடியைக் கொடுக்கத்தான் போகிறார்கள். ஆனால், தலைவர் கலைஞருடன் ஒரு மகனாக என்னுடைய உறவைப் பற்றி, வரு சொல் பேசக் கூட உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. எந்தத் தகுதியும் கிடையாது.

தலைவர் கலைஞரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? தலைவர் கலைஞர் ஒரு சிங்கம்! வாழ்ந்த காலம் வரை, கோடிக்கணக்கான தொண்டர்களை என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே' என்ற ஒற்றை மந்திரத்தில் கட்டிப் போட்டிருந்-தவர் நம்முடைய தலைவர் கலைனார் அவர்கள். முதுமையால் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் ஒய்வெடுத்தார்.

நினைவாற்றலை இழந்தபோதுகூட, மருத்துவர்கள் உங்களுக்கு யாரைப் பிடிக்கும் என்று கேட்டால், 'அண்ணா... அண்ணா...' என்று சொன்ன பேரறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பி அவர். முடியாத நிலையில்கூட, அறிவாலயம் செல்ல வேண்டும்,' முரசொலி'க்குச் செல்ல வேண்டும் என்று துடித்தவர்.

அவரை யாரும் சிறை வைக்க முடியாது. அவருடைய இதயச்சிறையில்தான் நான் உட்பட உடன்பிறப்புகள் அத்தனை பேரும் குடியிருந்தோம். எடப்பாடி பழனிசாமி அவர்களே... தலைவர் கலைஞர் பெயரைச் சொல்லக்கூட உங்களுக்குத் தகுதியும் கிடையாது; எந்தவித யோக்கியதையும் கிடையாது” என்று வெடித்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

அந்த நேரத்தில் உணர்ச்சியால் அவர் குரல் உயர்ந்தது. கர்ஜித்தது. கூட்டமே கொந்தளித்தது. உணர்ச்சியால் ததும்பி நின்றார்கள் உடன்பிறப்புகள். 'என் உயிரினும் மேலான...' என்று கலைஞர் அவர்கள் சொல்கிறார் என்றால் அதன் உண்மையான பொருள் என்ன என்பதன் அடையாளமாக இந்தக் காட்சி இருந்தது.

வங்கக் கடலோரம் பேரறினார் அண்ணாவுக்கு அருகில் தலைவர் கலைஞரையும் அடக்கம் செய்ய இடம் கேட்டார் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். ஆனால் அதனை பழனிசாமி அரசு ஏற்கவில்லை. தலைவர் மு.க.ஸ்டாலின், முரசொலி செல்வம், மு.க.அழகிரி, டி.ஆர்.பாலு, ஐ.பெரியசாமி, கனிமொழி ஆகியோர் நேரில் சென்று முதலமைச்சர் பழனிசாமியிடம் கோரிக்கை வைத்தார்கள்.

'எனது தந்தை என்பதற்காக அல்ல, ஐந்து முறை இந்த நாட்டின் முதலமைச்சர் என்பதற்காக இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளுங்கள்' என்று தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். ஆனால் பழனிசாமி அதற்கு உடன்படவில்லை. பின்னர் இதனை கடிதமாக எழுதியும் அனுப்பினார் தலைவர் மு.க.ஸ்டாலின். இந்த கடிதத்தை மூத்த முன்னோடிகள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி ஆகியோர் நேரில் சென்று முதலமைச்சர் பழனிசாமியிடம் வழங்கினார்கள். கிண்டியில் இடம் தருவதாக பழனிசாமி ஏமாற்றினார்.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டது கழகம். அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் மனுவை முன் வைத்து கழக வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், விடுதலை, என்.ஆர்.இளங்கோ, வில்சன் ஆகியோர் வாதிட்டனர். மனுவை விசாரித்த நீதிபதிகள் குலுவாடி ரமேஷ், சுந்தர் அமர்வு, 'கலைஞரின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய சட்டரீதியான எந்த தடையும் இல்லை' என்று தீர்ப்பு அளித்தனர்.

நீதிமன்றம் அனுமதி பெற்று,ஆகஸ்ட் 3 அன்று அறினார் அண்ணா நினைவிடம் அருகில் தலைவர் கலைஞர் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. பழனிசாமியின் நடு மண்டையில் அன்றே கொட்டி விட்டது உயர்நீதிமன்றம்.

தலைவர் கலைஞரைக் கண்போலக் காத்தார் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். 'ஓயாமல் உழைத்த தொண்டன் இங்கே உறங்குகிறான்' என்று தனது நினைவகத்தில் எழுதச் சொன்னவர் கலைஞர் அவர்கள். 'ஒய்வுக்கே ஓய்வு கொடுத்த தலைவர்' என்று அவரைக் குறிப்பிடுவார் முதலமைச்சர். வயது மூப்பின் காரணமாக ஓய்வெடுக்க வேண்டிய நிலையில் கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்தார் கலைஞர்.

ஆனாலும் அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கியப் புள்ளிகள், இலக்கியவாதிகள், திரையுலகத்தினர் ஆகியோர் தலைவர் கலைஞரைச் சந்திக்க நினைத்தால் அவர்கள் காலை நேரத்தில் வந்து தலைவர் கலைஞரைச் சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார் முதலமைச்சர் அவர்கள். தினந்தோறும் இப்புகைப்படங்கள் வெளியாகி வந்தது என்பது பச்சைத் துரோகி பழனிசாமிக்குத் தெரியுமா?

நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் இதற்கு சாட்சியாக இருக்கின்றன. வீடியோக்கள் ஆதாரங்களாக இருக்கின்றன. இதெல்லாம் பச்சைத் துரோகி பழனிசாமிக்குத் தெரியுமா?

அறிவாலயம் வந்தார் கலைஞர். 'முரசொலி'க்கு வந்தார் கலைஞர். பல நேரங்களில் நகர் வலம் வந்தார் கலைஞர். அவர் அடிக்கடி வந்து சென்ற இடமெல்லாம் அழைத்து வரப்பட்டார் கலைனார். இதெல்லாம் பச்சைத் துரோகி பழனிசாமிக்குத் தெரியுமா?

தலைவர் கலைஞர் மறைந்த பிறகு தமிழ்நாடு முழுவதும் புகழஞ்சலிக் கூட்டங்களை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடத்தியதும், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் கலைஞர் சிலையை திறந்து வைத்திருப்பதும் பச்சைத் துரோகி பழனிசாமிக்கு தெரியுமா?

எம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு விழாவை ஒழுங்காகக் கொண்டாடத் துப்பு இல்லாதவர் பழனிசாமி. ஜெயலலிதாவுக்கு இரங்கல் கூட்டம் நடத்த யோக்கியதை கூட இல்லாதவர் பழனிசாமி. பதவி கொடுத்த சசிகலா காலை வாரி விட்ட கடைந்தெடுத்த துரோகி பழனிசாமி.

அவருக்கு கலைஞரைப் பற்றியும் பேச யோக்கியதை இல்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் பற்றிப் பேசவும் அருகதை இல்லை.

Also Read: அமைதியை விரும்புவது தமிழ்நாட்டின் D.N.A.. அதைச் சிதைக்க துடிக்கும் NDA - மதுரையில் கர்ஜித்த முதலமைச்சர்!