murasoli thalayangam
“மீண்டும் கிளம்பி ‘குட்கா பூதம்’.. அ.தி.மு.க ஆட்சியில் நடந்த தகிடுதத்தங்கள்” : வெளுத்து வாங்கிய முரசொலி !
அ.தி.மு.க. (குட்கா பிரிவு) 1
அ.தி.மு.க.வில் பழனிசாமி பிரிவு, பன்னீர்செல்வம் பிரிவு, சசிகலா பிரிவைப் போல குட்கா பிரிவு இருக்கிறது என்பதை நாடும், நாட்டு மக்களும் அறிவார்கள். கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் என்பவை ...
* தூத்துக்குடியில் அமைதியாக ஊர்வலம் சென்று கொண்டிருந்தவர்களைக் கலைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரைத் துள்ளத் துடிக்கச் சுட்டுக் கொன்றதும் 'அதனை டி.வி.யை பார்த்து தான் நானே தெரிந்து கொண்டேன்' என்று அன்றைய முதலமைச்சர் பழனிசாமி சொன்னதும்.
* பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்முறை செய்து படம் எடுத்து மிரட்டியவர்களைக் காப்பாற்றியதும் - அ.தி.மு.க. பிரமுகர்களான அவர்கள் துணிச்சலாக மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கே வந்து பேட்டி அளித்ததும் அந்த விவகாரத்தையே அமுக்கியதும்
* ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடந்த கொள்ளைகள் அதை ஓட்டி நடந்த கொலைகள் தற்கொலைகள் மர்ம மரணங்கள்
* ஊழல் வழக்கில் பழனிசாமி மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதும் அது பற்றிக் கேட்ட பழனிசாமி, 'யார் மீது தான் ஊழல் புகார் இல்லை' என்று டெல்லியில் பேட்டி அளித்ததும் உச்ச நீதிமன்றத்திற்கு ஓடிச் சென்று தடை உத்தரவு பெற்றதால் பழனிசாமி பதவியில் தொடர்ந்ததும்
* குட்கா விற்பனையை இரண்டு அமைச்சர்கள் சில காவல்துறை அதிகாரிகள் துணையோடு நடத்தியதும்தான் கடந்த கால அதிமுக ஆட்சியின் மறக்க முடியாத சாதனைகள் ஆகும். இதை எல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து வெள்ளையும் சொள்ளையுமாக வந்து பேட்டி கொடுத்துக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி. அவர் இப்போது என்ன பதவியில் இருக்கிறார் என்பது அவருக்கே தெரியாது. அ.தி.மு.க.வில் இருக்கிறார் அவ்வளவுதான்!
பழனிசாமி மீதான ஊழல் வழக்கு உச்சநீதிமன்ற விசாரணையில் இருக்கிறது!
பொள்ளாச்சி விவகாரம் போலீஸ் விசாரணையில் இருக்கிறது!
கொடநாடுவழக்கு போலீஸ் விசாரணையில் இருக்கிறது!
இதோ இப்போது குட்கா வழக்கு விஸ்வரூபம் பெற்று இருக்கிறது!
முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மற்றும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேரில் 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய சி.பி.ஐ.க்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. குட்கா பூதம் மீண்டும் கிளம்பி இருக்கிறது.
சென்னையில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்ய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், ஐ.பி.எஸ். அதிகாரிகள், வணிக வரித்துறை அதிகாரிகள் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு லஞ்சம் தரப்பட்டதாக 2017ஆம் ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து வருமான வரித்துறை பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதனை வைத்து ஏற்கனவே சி.பி.ஐ. முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில் இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள், ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய சி.பி.ஐ. அனுமதி கோரியிருந்தது. முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்பட 11 பேரில் 9 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ.க்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மீதும், ஓய்வுபெற்ற வணிக வரி மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் மீதும் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
2017 ஆம் ஆண்டு நடந்த விவகாரம் இது. இப்போது தான் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கி இருக்கிறது. இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட தகிடுதத்தங்கள் கொஞ்சமல்ல.
குட்கா வியாபாரிகளிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்துகிறது. அப்போது தங்களது வியாபாரத்துக்கு துணை நின்றவர்கள் அ.தி.மு.க. ஆட்சியில் யார் யார் என்பதை விலாவாரியாக அந்த வியாபாரிகள் சொல்கிறார்கள். அதற்கான ஆதாரங்களையும் கொடுக்கிறார்கள். 250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடத்திய நிறுவனம் அது. அந்த நிறுவனத்தில் இருந்து 40 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டுள்ளது அ.தி.மு.க. ஆட்சியில்.
* இதில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாகவும், குற்றவாளிகளை தப்பிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்வதாகவும் பரவலாக பேசப்பட்ட நிலையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சிபிஐ விசாரணை தேவை என்று அதில் முறையீடு வைத்திருந்தார். அன்றைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி முன்னிலையில் இந்த வழக்கு நடைபெற்றது.
சி.பி.ஐ. விசாரணைதேவையில்லை என்று பழனிசாமி அரசு பதில் மனுதாக்கல் செய்தது. ஆனால் மத்திய கலால் வரித்துறை தாக்கல் செய்த பதிலில், "டெல்லியில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஏராளமான குட்கா பொருள்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதை விற்பதற்காக ரூ.55 கோடி வரை ஹவாலா முறையில் பணபரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டு இருந்தது. வருமான வரித்துறையும் இதனை வலிமைப்படுத்துவது மாதிரியான ஆதாரங்களைக் கொடுத்தது.
தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, அப்துல்குத்தூஸ்அமர்வு, சி.பி.ஐ. விசா ரணைக்கு உத்தரவிட்டது. (2018 ஏப்ரல் 26)
தொடரும்....
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!