murasoli thalayangam
விவசாயிகளை கார்ப்பரேட்களிடம் ஒப்படைக்கத் திட்டமிடும் அ.தி.மு.க! - முரசொலி தலையங்கம்
தமிழ்நாடு வேளாண் விளைபொருள், கால்நடை ஒப்பந்தப் பண்ணையம் மற்றும் சேவைகள் சட்டம்-2019 என்ற சட்டத்தை அ.தி.மு.க அரசு கொண்டுவந்திருக்கிறது. இந்த சட்டத்தின் கீழ் கரும்பு, மூலிகைப் பயிர்கள், விவசாயப் பயிர்கள், இறைச்சிக் கோழி உள்ளிட்டவை தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொள்ளலாம். இந்த சட்டம் விவசாயிகளை முழுமையாகக் கார்ப்பரேட்களின் கைகளுக்குள் கொண்டு சேர்த்துவிடும். மேலும் இதனால் அத்தியாவசியப் பொருட்கள் மீதான அரசின் கட்டுப்பாடு தளர்ந்து, தனியார் ஆதிக்கத்திற்குச் சென்றுவிடும் என்ற கவலையில் விவசாயிகள் இருப்பதை முரசொலி சுட்டிக்காட்டியுள்ளது.
விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை அ.தி.மு.க அரசு இதுவரை கேட்கவில்லை. பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் கிடைக்கும் நிதி நிவாரணத்தைக் கூட விவசாயிகளிடம் கொடுக்காமல், அவர்கள் கொடுக்க வேண்டிய கடனுக்கு கழித்துக்கொள்கிறது.
டெல்டா மாவட்டங்களை வளைத்து பெட்ரோலிய மண்டலம், சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை, விளைநிலங்களின் வழியே உயர்மின் கோபுரம் ஆகிய திட்டங்களால் விவசாயிகளின் வாழ்வை அடியோடு அழித்துக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க அரசு. இவற்றையெல்லாம் மறைக்க ஒப்பந்த சாகுபடி சட்டம் என்ற புதிய ஏமாற்று வித்தையைக் காட்டி திசை திருப்பிவிட முடியாது என முரசொலி தலையங்கம் கூறியுள்ளது.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பற்றி ‘பேச்சு - மூச்சே’ இல்லை!” : தங்கம் தென்னரசு விமர்சனம்!
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!