M K Stalin
திருநெல்வேலி TO திருமங்கலம்... 33 தொகுதிகளில் முதலமைச்சரின் அடுத்த 3 நாள் பிரச்சாரம்... விவரம் உள்ளே!
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநில தேர்தல் இந்த மாதம் (ஏப்ரல்) நடைபெறுகிறது. அதன்படி தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில், மே 4-ம் தேதி வாக்கு எண்ணப்படுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த மார்ச் 30-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 6-ம் தேதியோடு நிறைவடைகிறது.
தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளன. இதில் திமுக 164 தொகுதிகளில் நேரடியாகவும், திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் கூட்டணிக் கட்சிகள் 11 தொகுதிகளிலும் என மொத்தம் 175 தொகுதிகளில் களமிறங்குகிறது.
மேலும் 59 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரித்து வருகிறார்.
அதன்படி நேற்று (மார்ச் 31) திருவாரூரில் தனது முதற்கட்ட பிரச்சாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார். தொடர்ந்து இன்று (ஏப்ரல் 1) காலை திருச்சியிலும், மாலை கரூரிலும் வேட்பாளர்களுக்காக முதலமைச்சர் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். இதைத்தொடர்ந்து நாளை (ஏப்.2) காலை ஈரோட்டிலும், மாலை கோவையிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இந்த நிலையில், முதலமைச்சரின் அடுத்த மூன்று நாள் (ஏப். 3 முதல் 5 வரை) இரண்டாம் கட்ட பிரச்சார பொதுக்கூட்ட அட்டவணையை திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு :-
=> ஏப்ரல் 3, மாலை 5 மணிக்கு...
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில்...,
திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் கழகத்தின் சார்பிலும், கூட்டணி கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.
=> ஏப்ரல் 4, காலை 9 மணிக்கு...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில்...
கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் கழகத்தின் சார்பிலும், கூட்டணி கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.
அதே நாள் மாலை 5 மணிக்கு... தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில்...
தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர், ஆலங்குளம் வாசுதேவநல்லூர் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் கழகத்தின் சார்பிலும், கூட்டணி கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.
=> ஏப்ரல் 5, காலை 9 மணிக்கு...
விருதுநகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில்....
சாத்தூர், ராஜபாளையம், சிவகாசி, திருவில்லிபுத்தூர், திருச்சுழி, அருப்புக்கோட்டை, விருதுநகர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளில் கழகத்தின் சார்பிலும், கூட்டணி கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.
அதே நாள் மாலை 5 மணிக்கு... மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில்...
மேலூர், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தி, சோழவந்தான், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகளில் கழகத்தின் சார்பிலும், கூட்டணி கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.
Also Read
-
“பாஜக கூட்டணியில், முழு சங்கியாகவே மாறியிருக்கிறார் பழனிசாமி!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
-
“கல்வித் துறையில் மாபெரும் பாய்ச்சலை உருவாக்கப் போகிற திராவிட மாடல் 2.O!” : முரசொலி தலையங்கம்!
-
ஒரே நாளில் 7 தொகுதிகளில் பிரச்சாரம் செய்து அசத்திய துணை முதலமைச்சர் உதயநிதி! : முழு விவரம் உள்ளே!
-
தேர்தலுக்கு தயாராகும் களம்! - ஏப்.3 அன்று திமுக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
திருவாரூரின் ஆர்ப்பரிப்போடு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - முழு உரை உள்ளே!