M K Stalin
“நான் முதல்வனின் அடுத்த version-ல் சர்வதேச அளவிலான சாதனைதான்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
தமிழ்நாட்டின் இளம் தலைமுறை கல்வியில் மட்டும் சிறந்து விளங்காமல், நல்லப் பணியிடங்களையும் பெற்று வாழ்வின் பல நிலைகளில் முன்னேற்றம் அடைய திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதில் முதன்மைத் திட்டமாக இளைஞர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான திறன் பயிற்சி அளிக்கும் ‘நான் முதல்வன்’ திட்டம் அமைந்துள்ளது. இத்திட்டத்தால், பல்வேறு போட்டித் தேர்வுகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் சிறந்த மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் உயரிய பொறுப்புகளுக்கு தேர்வாகி வருகின்றனர்.
அவ்வரிசையில், முன்னெப்போதும் இல்லாத வகையில், அரசின் திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் பயன்பெற்று தமிழ்நாட்டளவில் 56 பேர் இந்தியக் குடிமைப் பணிக்கு (UPSC) தேர்வாகியுள்ளனர்.
அதிலும், அகில இந்திய அளவில் 2ஆவது இடத்தைப் பெற்று அசத்தியுள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜேஸ்வரி. அவரைத் தொடர்ந்து ராஜா முகைதீன் 7ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். இவர்கள் இருவரும் நான் முதல்வன் திட்டத்தால் பயன்பெற்றவர்கள் என்பது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது, “நான் முதல்வன் 2.O பற்றி Stalin Statement-இல் அறிவித்த நாளில் இத்தகைய வெற்றிச் செய்தி வெளியானது பெரும் ஊக்கமளிக்கிறது.
நான் முதல்வனின் முதற்பகுதியே இத்தனை சாதனையாளர்களை உருவாக்கியிருக்கிறதென்றால், இதன் அடுத்த version எப்படி இருக்குமென நீங்களே பாருங்கள்...
நமது தமிழ்நாட்டு இளைஞர்கள் இந்திய அளவில் மட்டுமின்றி, International அளவிலும் சாதனை படைக்கப் போகிறார்கள்!”
Also Read
-
சிவப்பு+மஞ்சள் = காவி... - நீட் எதிர்ப்பு பயணத்துக்கு தடை விதித்த தவெக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
“முதுகெலும்பில்லா ஆட்சி தமிழ்நாட்டில் தொடர வேண்டுமா CM sir?” : அப்பாவு கடும் கண்டனம்!
-
குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையால் வந்த வினை : கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!