M K Stalin
2 அடித்தளங்கள், 11 தளங்கள்.. ரூ.249 கோடியில் திறக்கப்பட்ட Fintech Tower.. அசத்திய திராவிட மாடல்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (2.3.2026) சென்னை மாவட்டம், ஆலந்தூர் வட்டம், நந்தம்பாக்கத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற விழாவில், நிதிநுட்ப நகரத்தில் 2.26 ஏக்கரில் 249 கோடி ரூபாய் செலவில் இரண்டு அடித்தளங்கள், தரை மற்றும் பதினொன்று தளங்களுடன் 5.56 லட்சம் சதுர அடி பரப்பளவில், அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள நிதிநுட்ப கோபுரத்தை திறந்து வைத்தார்.
உலகம் டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் நிதிநுட்ப துறை சார்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கி, நிதிநுட்ப துறையில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழ்நாட்டினை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், முதலமைச்சர் அவர்கள் 17.06.2023 அன்று சென்னை மாவட்டம், ஆலந்தூர் வட்டம், நந்தம்பாக்கத்தில் 56 ஏக்கர் நிலப்பரப்பில், நிதிநுட்ப நகரம் (FinTech City) அமைப்பதற்கும், அதில் முதற்கட்டமாக 5.56 லட்சம் சதுர அடி கட்டட பரப்பளவில் சர்வதேச தரத்திலான நிதிநுட்ப கோபுரம் (FinTech Tower) என்ற அடுக்குமாடி கட்டடம் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிதிநுட்ப கோபுரக் கட்டடம் 249 கோடி ரூபாய் செலவில் இரண்டு அடித்தளங்கள், தரை மற்றும் பதினொன்று தளங்களுடன் 5.56 லட்சம் சதுர அடி பரப்பளவில், அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.
நிதி மற்றும் நிதிநுட்ப நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை தொடங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் உள்ள உயர்தர அலுவலக இடங்கள் நிதிநுட்ப கோபுரத்தில் (Fintech Tower) அமைக்கப்பட்டுள்ளன.
LEED Platinum Green Building தரத்துடன் உருவாக்கப்பட்ட இக்கட்டடம், வாகன நிறுத்த வசதிகள், 250 மற்றும் 50 இருக்கை வசதிகளைக் கொண்ட கூட்டரங்கங்கள், உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடம், குழந்தைகள் பராமரிப்பு மையம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.
தடையற்ற வணிக சூழலை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உலகத் தரத்திலான உள்கட்டமைப்புடன் உருவாக்கப்பட்ட இக்கட்டடம், தமிழ்நாட்டின் நிதிநுட்ப வளர்ச்சிக்கான முக்கிய மையமாக திகழும்.
இந்நிகழ்ச்சியின்போது, M/s. Prime Forex Pvt. Ltd., M/s. Simptra Technologies Pvt. Ltd., மற்றும் M/s. MidFin Wealth Pvt. Ltd. ஆகிய நிறுவனங்களுக்கு நிதிநுட்ப கோபுரத்தில் அலுவலக இடங்கள் ஒதுக்கீட்டிற்கான ஆணைகளை முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.
Also Read
-
வரலாற்றில் முதல்முறையாக.. 5,367 அடுக்குமாடி குடியிருப்புகள்.. ஒரே நாளில் திறந்து வைத்து அசத்திய முதல்வர்!
-
அரையிறுக்குள் நுழைந்த இந்தியா… இந்த நாளுக்காகத் தான் காத்திருந்தேன்… உருக்கமாக பேசிய சஞ்சு சாம்சன்!
-
TAMIL NADU LEADERSHIP SUMMIT: “நாங்கள் இப்படி All Rounder-ஆக அடித்து ஆடுவதால்தான்..” -முதலமைச்சர் சூளுரை!
-
பழிவாங்குதல் ஒன்றே பா.ஜ.க.வின் பாதை... நீதிமன்றத்தில் கொட்டு வாங்கினாலும் வெட்கம் இல்லை - முரசொலி!
-
தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு… 8.27 லட்சம் மாணவர்கள்… 3,412 மையங்கள் ரெடி!