M K Stalin
200 மகளிர் தங்கும் வகையில் ரூ.21.02 கோடியில் 4 தோழி விடுதிகள்... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (16.2.2026) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மதுரை, தருமபுரி, கடலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் 21 கோடியே 2 இலட்சம் ரூபாய் செலவில், 200 மகளிர் தங்கும் வகையில், புதிதாக கட்டப்பட்டுள்ள 4 “தோழி” பணிபுரியும் மகளிருக்கான விடுதிக் கட்டடங்களை திறந்து வைத்தார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் சார்பில் இதுவரை சென்னை, திருவள்ளூர், கோயம்புத்தூர், செங்கல்பட்டு, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், வேலூர், சேலம், விழுப்புரம், திருநெல்வேலி, பெரம்பலூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய 15 மாவட்டங்களில் 1,900 பணிபுரியும் மகளிர் பயனடைந்து வரும் வகையில் முதலமைச்சர் அவர்களால் 19 தோழி விடுதிகள், திறந்து வைக்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, பிற மாவட்டங்களில் பணிபுரியும் மகளிர் விடுதிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு, 21.05.2025 அன்று 13 மாவட்டங்களில் 14 விடுதிகளும், 13.11.2025 அன்று மேலும் 12 மாவட்டங்களில் 12 விடுதிகளும் சேர்த்து, மொத்தம் 26 விடுதிகள் 239 கோடியே 15 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2740 மகளிர் பயன்பெறும் வகையில் புதிய தோழி விடுதிகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டுமானப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைப்பெற்று வருகின்றன.
இவ்விடுதிகளில் பயோமெட்ரிக் உள் நுழைவு, 24x7 பாதுகாப்பு வசதி, Wi-Fi வசதி, சிசிடிவி வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஆரோக்கியமான உணவு, பகல் நேர குழந்தைகள் பராமரிப்பு வசதி, சுடுநீர் வசதி, சலவை இயந்திரம், இஸ்திரி வசதி, வாகன நிறுத்துமிடம் மற்றும் பொழுதுபோக்கு அறை போன்ற வசதிகள், குறைந்த வாடகையில் வழங்கப்பட்டு வருகின்றன. மகளிரின் பாதுகாப்பான, வசதியான தங்குமிடங்கள் தேவைகளை கருத்தில் கொண்டு, பணிபுரியும் பெண்கள் மட்டுமல்லாது பயிற்சி, உயர்கல்வி, நேர்காணல் போன்ற தேவைகளுக்காக நகரங்களுக்கு இடம் பெயரும் அனைத்து மகளிரின் தேவைகளையும் கருத்தில் கொண்டு குறுகிய கால தங்கும் வசதியையும் பயன்படுத்திகொள்ளும் வகையில் இவ்விடுதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பணிபுரியும் மகளிர் விடுதிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு தற்போது மதுரை, தருமபுரி, கடலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் 21 கோடியே 2 இலட்சம் ரூபாய் செலவில், 200 மகளிர் தங்கும் வகையில், புதிதாக கட்டப்பட்டுள்ள 4 பணிபுரியும் மகளிருக்கான விடுதிக் கட்டடங்களை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
Also Read
-
5 ஆண்டுகளில் தமிழ்நாடு வேளாண்மையில் புரட்சி… திராவிட மாடல் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள்!
-
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 506 புதிய வீடுகள்... திறந்து வைத்தார் முதலமைச்சர்! - முழு விவரம்!
-
ஓசூர் முதல் வேதாரண்யம் வரை... ரூ.317.73 கோடியில் மருத்துவக் கட்டடங்கள்... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
அடுக்குமாடி தொழில் வளாகம் முதல் பொது வசதி மையங்கள் வரை... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
வாழ்வா? சாவா? ஆட்டம், வீணான கனடா வீரரின் அதிரடி சதம்: சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்த நியூசிலாந்து!