M K Stalin
ரூ.80.62 கோடி செலவில்... ஆவின் நிறுவனத்தின் சார்பில் முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு... - விவரம்!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (13.1.2026) தலைமைச் செயலகத்தில், பால்வளத் துறையின் கீழ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் 80 கோடியே 62 இலட்சம் ரூபாய் செலவில் கால்நடை தீவன உற்பத்தி ஆலை, ஊறுகாய்புல் தீவன கட்டுகள் உற்பத்தி ஆலை, நொதியூட்டப்பட்ட பால் உபபொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, 5 நுண்ணுயிரியல் ஆய்வுக் கூடங்கள் ஆகிய 8 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.
ஆவின் நிறுவனம் கிராம அளவில் 9,096 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள், மாவட்ட அளவில் 27 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் மற்றும் மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்ற மூன்று அடுக்கு கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் தற்போது 3.56 இலட்சம் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 37.44 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து 31 லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இந்திய அளவில் கூட்டுறவு அமைப்பின் கீழ் பால் கொள்முதல் செய்யும் மாநிலங்களில் தமிழ்நாடு நான்காவது இடத்தை பெற்றுள்ளது.
=> ஆவின் நிறுவனத்தின் சார்பில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற பணிகளின் விவரங்கள்
பால் உற்பத்தியாளர்களுக்கு தரமான கால்நடை தீவன தேவையை பூர்த்தி செய்து பால் உற்பத்தியை அதிகரிக்கவும், தற்போது அதிகரித்து வரும் கால்நடை தீவன தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், தஞ்சாவூர் மாவட்டம், புதுக்குடியில் நபார்டு ஊரக உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதியின் கீழ் 50 கோடி ரூபாய் செலவில் நாளொன்றுக்கு 300 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட கால்நடை தீவன உற்பத்தி ஆலை;
கோடை மற்றும் வறட்சி காலங்களில் கால்நடைகளுக்கு வருடம் முழுவதும் தரமான பசுந்தீவன தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் சிறப்பு பகுதி வளர்ச்சி திட்ட நிதியின் கீழ் 6.72 கோடி ரூபாய் செலவில் நாளொன்றுக்கு 25 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட ஊறுகாய்புல் தீவன கட்டுகள் உற்பத்தி ஆலை;
ஆவின் விற்பனை அதிகரிக்கவும், நுகர்வோர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் 21.57 கோடி ரூபாய் செலவில் நாளொன்றுக்கு 6,000 லிட்டர் ஐஸ்கீரிம் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் 10,000 லிட்டர் நொதியூட்டப்பட்ட பால் உபபொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை;
பாலின் தரத்தினை உறுதி செய்யும் வகையில் திருவண்ணாமலை, கடலூர், கரூர், தருமபுரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் 2.33 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நுண்ணுயிரியல் ஆய்வு கூடங்கள்;
- என மொத்தம் 80.62 கோடி ரூபாய் செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
Also Read
-
“சென்னை சங்கமத்துடன் சேர்ந்து இதுவும் நடக்கும்...” - கனிமொழி எம்.பி. சொன்னது என்ன?
-
“அரசின் லேப்டாப்பை பயன்படுத்தி ஆண்களைவிட அதிகமாக பெண்கள் சாதனைகளை படைக்க வேண்டும்” - துணை முதலமைச்சர்!
-
இந்தியாவின் கோரிக்கையை மீண்டும் மறுத்த வங்கதேச அணி... T20 உலகக்கோப்பையில் பங்கேற்குமா வங்கதேசம்?
-
தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு & சுழற் பொருளாதார முதலீட்டுக் கொள்கைகள்... வெளியிட்டார் முதலமைச்சர்!
-
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான 3-வது லட்ச நபர்... பணி ஆணை வழங்கினார் முதலமைச்சர் !