M K Stalin
சாலை விபத்தில் கூவத்தூர் காவல் நிலைய தலைமைக் காவலர் உயிரிழப்பு... முதலமைச்சர் இரங்கல் & நிதியுதவி!
செங்கல்பட்டு அருகே கார் மோதிய விபத்தில் கூவத்தூர் காவல் நிலைய தலைமைக் காவலர் கடந்த நவ.19-ம் தேதி உயிரிழந்தார். புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்றபோது எதிரே வந்த கார் மோதியதில் காவலர் அழகேசன் (47) பலியானார். இந்த நிலையில் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து, நிதியுதவி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பு வருமாறு :-
செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த அழகேசன் (வயது 47) என்பவர் கடந்த 19.11.2025 அன்று புதுச்சேரி – சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சீருடையில் காவல் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் தலைமைக் காவலர் அழகேசன் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்சியும், வேதனையுமடைந்தேன்.
தலைமைக் காவலர் அழகேசன் அவர்களின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அழகேசன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு 30 இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
Also Read
-
‘RCB பெயர் இல்லை Brand.. 19 வருட வரலாற்றிலேயே முதல் முறையாக 30 கோடி அமெரிக்க டாலர்!’ - முழு விவரம் உள்ளே!
-
6 இலட்சம் நூல்கள் - வாசிப்பு பெருகினால்தான் தமிழ்நாடு... : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டத்தின் பெயரையும் மாற்றும் த.வெ.க! : பெயர் மாற்றி ‘ஏமாற்றும்’ அவலம்!
-
மேகதாது அணை.. கர்நாடக செல்லும் முதல்வர் விஜய்.. வீடியோ போடலாம், விடியலைத் தராது: எச்சரிக்கும் முரசொலி!
-
“முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை!”: கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!