M K Stalin
“SIR எனும் ஆபத்துக்கு எதிராகச் சட்டப் போராட்டமும்! களப் போராட்டமும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஒன்றிய பா.ஜ.க அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் மறைமுக கூட்டுறவால் பீகாரில் கடும் விமர்சனத்திற்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR), தற்போது தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு, அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் இருப்பது மட்டுமல்லாமல், பல்வேறு அரசியல் குளறுபடிகளுக்கு வித்திடும் வகையிலும் அமைந்துள்ளது.
மக்களின் அடிப்படை உரிமைக்கு எதிரான இது போன்ற நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும் என்ற முனைப்புடன் நவ.02 அன்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
அதில் S.I.R-க்கு எதிராக அனைத்துக் கட்சிகளாலும் வழக்கு தொடரப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
எனினும், S.I.R குறித்து மக்களுக்கு விழுப்புணர்வூட்ட வேண்டும் என்ற முனைப்பில், தமிழ்நாட்டில் S.I.R கொண்டு வந்துள்ள இந்தியத் தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து வருகிற நவ.11 அன்று “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” தமிழ்நாட்டின் மாவட்டத் தலைநகரங்கள் தோறும் நடைபெறும் என மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்களால் அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இன்று (நவ.11) தமிழ்நாடு முழுவதும் தி.மு.க, காங்கிரஸ், சி.பி.ஐ.எம், சி.பி.ஐ, ம.தி.மு.க, வி.சி.க உள்ளிட்ட கட்சிகளின் பங்களிப்புடன் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இதனைக் குறிப்பிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தவை பின்வருமாறு,
“S.I.R-ஐத் தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை!
ஒருபுறம், மக்களாட்சியின் அடிப்படையான வாக்குரிமையையே பறிக்கும் S.I.R எனும் ஆபத்துக்கு எதிராகச் சட்டப் போராட்டம் - களப் போராட்டம்;
மறுபுறம், தொடங்கப்பட்டுவிட்ட S.I.R பணிகளில் குளறுபடிகளைத் தடுத்திட WarRoom உதவி எண்;
களப் போராட்டத்தில், இன்று தமிழ்நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பதாகைகளை ஏந்தியும் - கண்டன முழக்கங்களை எழுப்பியும் S.I.R எனும் பேராபத்துக்கு எதிராகக் கூடியுள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர்!
தொடர்ந்து செயலாற்றுவோம்! நம் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்போம்!”
Also Read
-
மதுராந்தகம் தொகுதி மக்களுக்காக.. மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய செய்தி.. தவெக-வை ஓட்டால் விரட்டுங்கள்!
-
திமுக தலைவர் வெளியிட்ட வீடியோ.. தாராபுரம் தொகுதி வாக்காளர்களே.. உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்!
-
“த.வெ.க தூய சக்தி அல்ல; துயர சக்தி” : மதுராந்தகத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு!
-
“சட்டமன்றத்தில் முதலமைச்சர் இன்னும் Dance Fightதான் போடல” : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
-
“தோல்விப் பயத்தால் ரூ.10,000 கொடுக்கம் த.வெ.க” : தேர்தல் ஆணையத்தில் என்.ஆர்.இளங்கோ புகார் மனு!