M K Stalin
வடகிழக்கு பருவமழை : “சமாளிக்க இந்த அரசு தயாராக உள்ளது” - ஆய்வுக்கு பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில் சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
மேலும் கனமழையால் பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களிடம் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் அங்கு பணிகளை துரிதப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மாநில பேரிடர் மீட்பு பணிகள் துறை செயலாளர் அமுதா, மாநில பேரிடர் மீட்பு பணிகள் துறை ஆணையர் லக்கானி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தார்கள்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, "நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெரிய அளவில் மழை பெய்துள்ளது. ஏற்கனவே 2 நாட்களாக மாவட்ட ஆட்சியாளர்களோடு ஆய்வுக் கூட்டங்களை நடத்தி அதனை மேற்பார்வையிட இங்கிருந்து மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை அனுப்பி வைக்கப்பட்டு பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
பெரிய அளவில் பாதிப்பு இருந்ததாக தற்பொழுது வரை செய்தி இல்லை. எது வந்தாலும் சமாளிக்க இந்த அரசு தயாராக உள்ளது. தென்காசிக்கு கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஏற்கனவே சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து திருச்சியில் மழை பெய்ததால் அங்கு சென்றுள்ளார். தற்பொழுது மீண்டும் தென்காசிக்கு போக சொல்லி இருக்கிறோம்.” என்றார்.
=> தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு வெள்ள நிவாரண நிதி கேட்டு அழுத்தம் கொடுக்கப்படுமா என்ற கேள்விக்கு...
"ஊடகத்தில் இருப்பவர்கள் தொடர்ந்து எழுதினால் அதுவே பெரிய அழுத்தமாக இருக்கும். ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதி எப்படி போதுமானதாக இருக்கும்? ரூ.2000 நிவாரண நிதி கொடுக்கும் பணிகள் ஏறத்தாழ முடிவடைந்துள்ளது.
உபரிநீர் திறந்து விடுவதற்கு முன்பாக எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது. சில இடங்களில் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேவைப்படும் இடங்களில் அந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து கடுமையாக எதிர்ப்போம்." என்றார்.
Also Read
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!