M K Stalin
“கொள்கைக்காக தொடங்கப்படும் முதல் OTT தளம்” - PERIYAR VISION OTT தளம் குறித்து முதலமைச்சர் புகழாரம்!
சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் சமூக நீதிக்கான உலகின் முதல் OTT தளம் "PERIYAR VISION-(Everything for everyone) " தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, கழக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, திரைப்பட நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு OTT தளத்தை தொடங்கி வைத்தனர்.
அப்போது இந்த தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்து செய்தி வீடியோவாக ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்வு குறித்து முதலமைச்சரின் வாழ்த்து செய்தியில் அவர் பேசியதாவது, "தந்தை பெரியார் உலகளாவிய மானுடத் தலைவராக பார்க்கப்படுகிறார். அவரது வரலாறு, கொள்கைகள் என அனைத்தையும் கலை வடிவமாக கொண்டு செல்லும் திராவிட இயக்கத்திற்கு பாராட்டுகள்.
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் சமூக ஊடகங்கள் பெருகி இருக்கக்கூடிய சூழலில் இளைஞர்களிடம் தந்தை பெரியாரின் கொள்ளைகளை எடுத்துரைக்க உருவாக்கப்பட்ட முதல் சமூகநீதி OTT தளம் தொடங்கப்பட்டுள்ளது. கொள்கைக்காக உலகில் தொடங்கப்படும் முதல் OTT தளம் இதுவாகதான் இருக்கும். அனைத்திலும் முன்னோடியாக இருக்கக்கூடிய திராவிடர் இயக்கம் இதிலும் முன்னோடியாக இருக்கிறது” என்றார்.
Also Read
-
மெட்ரோ விவகாரம் : பதிலே இல்லாமல் பதில் அளித்துள்ள ஒன்றிய அமைச்சர்.. - சு.வெ எம்.பி. விமர்சனம்!
-
“முத்தமிழறிஞர் கலைஞருக்கு ’பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும்” - தமிழச்சி தங்கப்பாண்டியன் MP வலியுறுத்தல்!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்! : முழு விவரம் உள்ளே!
-
சுப்ரியா சாகு IAS-க்கு ‘Champions Of The Earth’ விருது: “தமிழ்நாடு பெருமை கொள்கிறது!” - முதலமைச்சர்!
-
“இவர்களது நியாயங்கள், மாநிலத்துக்கு மாநிலம் மாறுகின்றன!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!