M K Stalin
"சகோதரர் மு.க.ஸ்டாலின் மீண்டும் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்" -வைகோ!
திமுக ஜனநாயகமுறைப்படி நடைபெற்ற உள்கட்சி தேர்தல் சுமுமாக முடிவடைந்து இரண்டாவது முறையாக திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். அதைத் தொடர்ந்து அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
இந்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜனநாயக முறைப்படி இந்தியாவில் உள்ள மற்ற எல்லா அரசியல் கட்சிகளுக்கும் முன்மாதிரியாக, இலக்கணமாக திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தலைமையேற்று நடத்தி வரும் முதலமைச்சர் ஆருயிர் சகோதரர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் வழியில் சின்னஞ் சிறு பிராயம் முதல் திராவிட இயக்கக் கொள்கைகளை வென்றெடுப்பதில் அடக்குமுறைகளைச் சந்தித்து, பல்வேறு பொறுப்புகளிலும் வெற்றிகரமாக இயங்கி, இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சியை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டும் மாநிலமாக நடத்தி வெற்றி கண்டிருக்கிறார்கள். பிற நாடுகளின் அரசுகளும் திராவிட மாடல் ஆட்சியை பின்பற்றுகிற காலம் வெகு தூரத்தில் இல்லை.
அவர்கள் மென்மேலும் வெற்றிபெற இதயபூர்வமாக வாழ்த்துகிறேன். மேலும் பல்லாண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக வழிநடத்திச் செல்ல வேண்டி விழைகிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மாண்புமிகு துரைமுருகன் அவர்களும், பொருளாளராக மானமிகு டி.ஆர்.பாலு அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும்,முதன்மைச் செயலாளராக மாண்புமிகு கே.என்.நேரு அவர்களும், துணைப் பொதுச்செயலாளர்களாக மாண்புமிகு ஐ.பெரியசாமி, மாண்புமிகு க.பொன்முடி, மானமிகு ஆ.இராசா, மானமிகு சகோதரி கனிமொழி, மானமிகு அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டிருப்பதற்கும் மகிழ்ச்சியோடு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்." என்று கூறியுள்ளார்.
Also Read
-
வேலியே பயிரை மேய்வதா? : விசாரணை என்ற பெயரில் இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட காவல் உதவி ஆய்வாளர்!
-
மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த த.வெ.க நிர்வாகி : தமிழ்நாடு முழுவதும் தொடரும் அராஜகம்!
-
“ஆதவ் அர்ஜுனா அரசியலில் ஒரு கள்ள நாணயம்” : ஆர்.எஸ்.பாரதி சாடல்!
-
“அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள கொள்கைத் தோழமைகளுக்கு வாழ்த்துகள்!” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
மின்வெட்டால் தவிக்கும் தமிழ்நாடு : த.வெ.க அரசு கொண்டு வந்த மாற்றம் இதுதான்!