M K Stalin

"சித்தரிக்கப்படாத ரியல் ஹீரோ வைகோ.. அவருக்கு துணையாக நானும் இருப்பேன்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி !

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவின் அரசியல் பயணத்தை விவரிக்கும் வகையில் 'மாமனிதர் வைகோ' என்ற ஆவணப்படும் தயாரிக்கப்பட்டுள்ளது.

சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 'மாமனிதர் வைகோ' என்ற ஆவணப்படத்தை வெளியிட்டார். விழாவில் துரை.வைகோ, கே.எஸ்.அழகிரி, நல்லகண்ணு, திருமாவளவன், கி.வீரமணி, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், காதர் மொய்தீன், வேல்முருகன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திரைப்படத்தில் வரும் ஹீரோக்கள் சித்தரிக்கப்பட்டவர்கள்.ஆனால் சித்தரிக்கப்படாத ரியல் ஹீரோ வைகோ என குறிப்பிட்டார். மேலும், எழுச்சிமிக்க, உணர்ச்சி மிக்க போராளி வைகோ.உயரத்தில் மட்டுமல்ல லட்சியத்தில், தியாகத்தில் உயர்ந்தவர் வைகோ என புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், நெருக்கடி காலத்தில் சிறைகளில் இருந்த அனைவருக்கும் வைகோ கடிதங்கள் எழுதி உற்சாகப்படுத்தினார். பொடாவில் கைதாகி சிறையில் இருந்த வைகோ, குகையில் இருந்த சிங்கம் போல் இருந்தார்.

மாணவரணியில் இருந்தபோது வைகோவிடம் தேதி கேட்டு கூட்டம் நடத்தியவன் நான். நெருக்கடி காலத்தில் சிறைகளில் இருந்த அனைவருக்கும் வைகோ கடிதங்கள் எழுதி உற்சாகப்படுத்தினார். மாநாடுகளில் உணவு நேரத்தில் தான் பேசுவார் வைகோ. அப்போது தான் கூட்டம் கலையாது எனக் கூறினார்.

மேலும், கருணாநிதியிடம் உங்களுக்கு பக்கபலமாக இருந்தது போல், ஸ்டாலினுக்கும் இருப்பேன் என வைகோ கூறினார். அதேபோல், வைகோவுக்கு துணையாக நானும் இருப்பேன். அவரது உடல் நலன் எனக்கு மட்டும் இல்லை இந்த நாட்டுக்கே முக்கியம். அதனால் தான் மக்களவை தேர்தலில் போட்டியிடாமல் மாநிலங்களவை செல்லுங்கள் என கூறினேன் எனக் கூறினார்.

Also Read: இது பெட்டா? லாக்கரா ? தொழிலதிபர் படுக்கையறையில் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ.2000,500 நோட்டுக் கட்டுகள்!