M K Stalin
“தேர்தல் வாக்குறுதிகளை முதல் நாளிலேயே நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்” - 5 திட்டங்களுக்கு கையெழுத்து!
தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் பெருவெற்றிப் பிறகு இன்று முதல்வராகப் பதவி ஏற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் எந்தத் திட்டத்துக்கு முதல் கையெழுத்தைப் போடப்போகிறார் என்பது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது.
இந்நிலையில், கொரோனா நிவாரண நிதி வழங்கும் அரசாணை உள்ளிட்ட 5 திட்டங்களுக்கான ஆணைகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
ஆளுநர் மாளிகையில் பதவியேற்றபின், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கோபாலபுரம் கலைஞர் இல்லம், பேராசிரியர் இல்லம் சென்றும் வணங்கினார்.
பின்னர் கோட்டைக்குச் சென்று தனது அறையில் பொறுப்பேற்றுக் கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், 5 திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.
1. முதல் அரசாணையாக கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ.4000 என அறிவிக்கப்பட்டிருந்தது. அதை முதல் தவணையாக மே மாதத்திலேயே ரூ.2000-ஐ குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் அரசாணை. இதன்படி 2 கோடியே, 7 லட்சத்து 66,000 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர்.
2. ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படுகிறது. அது இந்த மாதம் 16ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
3. மகளிர், பணிக்குச் செல்லும் பெண்கள், படிக்கும் பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.
4. தேர்தல் பிரச்சாரத்தின்போது பெறப்பட்ட மனுக்களை 100 நாட்களில் தீர்வு காண “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்கிற திட்டத்தின் கீழ் துறை உருவாக்கப்படுகிறது. இதற்காக ஐ.ஏ.எஸ் அந்தஸ்து அதிகாரி நியமிக்கப்படுகிறார்.
5. கொரோனா சிகிச்சை பெறுவோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை செலவுகளை அரசே வழங்கும்.
மேற்கண்ட 5 கோப்புகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்தை இட்டுள்ளார்.
Also Read
-
சமூகநீதித் தேரைப் பின்னுக்குத் தள்ளுவதா? : விஜய்க்கு தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கேள்வி!
-
“தமிழோடு விளையாடியவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை” : தமிழ்த்தாய் வாழ்த்து அவமரியாதை - திமுக கண்டனம்
-
ராமநாதபுரத்தில் பரபரப்பு : ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்ட சார்பதிவாளர் கையும் களவுமாகக் கைது!
-
”CSK நிர்வாகத்திற்கும் தோனிக்கும் பிரச்சனையா.. அஸ்வின் கிளப்பிய புதிய புயல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!”
-
ஓடி ஒளியாதீர்கள் CM Sir : மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு - கனிமொழி என்.வி.என்.சோமு கண்டனம்!