M K Stalin
“MLA-க்கள் தொகுதியில் இருக்கவேண்டிய நேரமிது... சட்டமன்றக் கூட்டம் தேவையா?” : மு.க.ஸ்டாலின் கேள்வி!
கொரோனா பாதிப்பு தமிழத்தில் அதிகரித்து வரும் நிலையில், நடைபெற்று வரும் சட்டமன்றக் கூட்டத்தில் தி.மு.க தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கொரோனா குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பிப் பேசினார்.
அப்போது பேசிய அவர், “பிரதமர் 22ம் தேதி யாரும் வீட்டில் இருந்து வெளியே வரக்கூடாது என நேற்று உரையாற்றி இருக்கிறார். ஒரிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றக் கூட்டத்தொடரை நிறுத்தி உள்ளனர்.
நாம் விழிப்புணர்வோடு இருக்கவேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். நோயை தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளோம். ஆனால் நாமே சட்டமன்றத்தைக் கூட்டி அதிகமானோர் கூடியுள்ளோம். இது முறையா?
மக்கள் பீதியில் உள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் அந்தந்தத் தொகுதிகளுக்குச் சென்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு அவர்கள் தொகுதியில் இருக்க வேண்டும். அதற்காக சட்டசபை விதிமுறைகளைத் தளர்த்த வேண்டும். மக்களுக்காக எம்.எல்.ஏக்கள் தொகுதியில் இருப்பதுதான் முறை.
மால்கள், திரையரங்குகள், சிறு கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னையில் பாண்டி பஜார், உஸ்மான் ரோடு பகுதி கடைகள் மூடப்பட்டன. கடைகள் மூடப்பட்டது குறித்த அளவுகோலை அரசு வைத்துள்ளதா?
தினக்கூலி வேலை செய்பவர்கள் இந்த கொரோனா வைரஸ் நடவடிக்கையால் பெரும் பாதிப்பு அடைந்து இருக்கிறார்கள். கேரள அரசு போல் ரேஷன் பொருட்களை மக்களுக்கு நேரில் அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கேரள அரசு போல் தமிழகத்தில் பாதிப்பு இல்லை என்று நீங்கள் கூறினாலும் விவசாயிகளுக்கும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் ரேஷன் பொருட்களை நேரில் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்துவதற்காக மாவட்டங்களில் சுகாதாரத்துறை வசதிகளை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தனியார் மருத்துவமனையிலும் போதிய வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். முகக் கவசங்கள் போதிய இருப்பு வைக்கப்பட வேண்டும். சிறு, குறு நிறுவனங்களில் சம்பள பிடித்தம் இல்லாமல் ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
சென்னையில் ஒருவர் தன்னுடைய வீட்டு முன்பாக ஒரு பலகையை வைத்துள்ளார். அதில், “யாரும் என்னை வந்து சந்திக்க வேண்டாம்” எனக் குறிப்பிட்டுள்ளார். இப்படியான சூழலில் நாம் சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!