M K Stalin
தி.மு.க. தலைவராக ஓராண்டு நிறைவு: உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி வளாகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பிக்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கழக பொருளாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி, தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு, கதிர் ஆனந்த் உள்ளிட்ட எம்.பிக்கள் பங்கேற்றனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், " தி.மு.க. தலைவராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. கடந்த ஓராண்டில் தன்னை ஊக்கப்படுத்தியதற்காகவும், உற்சாகப்படுத்தியதற்காகவும் ஊடக நண்பர்களுக்கு நன்றியும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்”. என்றார்
மேலும் பேசிய அவர், மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபடுமாறும், தேர்தலில் வெற்றியை பெற்றுத்தந்த மக்களுக்கு நன்றி அறிவிக்கும் கூட்டத்தையும் நடத்த வேண்டும் என தி.மு.க. எம்.பிக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
இதுவரை நாடாளுமன்றத்தில் ஆற்றிய பணிகள் குறித்தும், இனிமேல் ஆற்றவேண்டிய பணிகள் குறித்தும் தி.மு.க எம்.பிக்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
Also Read
-
“‘ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை’ இந்தி மொழிபெயர்ப்பு நூல்!” : முதலமைச்சர் வெளியிட்டார்!
-
அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
”சமூக வலைத்தளங்களில் நீதிபதிகளையும் விட்டு வைப்பதில்லை” : நீதிபதி செந்தில்குமார் கருத்து!
-
நாகை மீனவர்கள் மீது தாக்குதல் : இலங்கை கடற்கொள்ளையர்கள் அராஜகம்!
-
“சென்னையில் அமைய இருக்கும் தமிழ்நாட்டின் நீளமான (14 கி.மீ) புதிய மேம்பாலம்!” : அமைச்சர் எ.வ.வேலு தகவல்!