M K Stalin
தமிழக மக்களின் வழக்கறிஞர்களாக தி.மு.க. எம்.பிக்கள் உள்ளனர் - மு.க.ஸ்டாலின் !
கடலுார் மாவட்டம் மஞ்சக்குப்பம் மைதானத்தில் தி.மு.க சார்பில் கலைஞர் பிறந்தநாள் மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், '' தி.மு.க., கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றி, சாதாரண வெற்றி அல்ல பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வெற்றி. தி.மு.க., கூட்டணி அரசியல் லாபத்திற்காக அமைந்தது அல்ல. கொள்கைக்காக அமைந்த கூட்டணி. விரைவில் அ.தி.மு.க ஆட்சி கவிழப்போவது உறுதி. தி.மு.கவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போயிருக்கிறார்கள், தி.மு.க அழிந்ததாக வரலாறு இல்லை.
தி.மு.க கூட்டணி வெற்றியால் செம்மொழியான தமிழ் மொழி நாடாளுமன்றத்தில் ஒலித்தது, இனி ஒவ்வொரு நாளும் தமிழ் ஒலிக்கும். தமிழக மக்களின் வழக்கறிஞர்களாக தி.மு.க. எம்.பிக்கள் உள்ளனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடாவிட்டால் காவிரி டெல்டா விவசாயிகளை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். ஆட்சியை கைப்பற்றுவதில் மட்டுமே அதிமுக அரசு கவனமாக உள்ளது. மக்களை நலத்திட்டங்கள் ஏதும் செய்யப்படவில்லை.
தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை என்றால், ஜோலார்பேட்டையில் இருந்து ஏன் தண்ணீர் எடுத்துவர வேண்டும்? '' இவ்வாறு கூறினார்.
Also Read
-
“‘தான் திருடி, பிறரை நம்பார்’ என்பதைப் போன்றவர்தான் எடப்பாடி பழனிசாமி!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்தை கண்டு ஒப்பாரி ஓலமிடும் பழனிசாமி : அமைச்சர் ரகுபதிக்கு பதிலடி!
-
திண்டுக்கல் மாவட்டத்தில் 2,62,864 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்!
-
“நீங்கள் மற்றவர்களுக்கு Inspire ஆக இருக்க வேண்டும்”: மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000! : நாளை (ஜன.8) தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!