M K Stalin
“இந்த மூன்று ஆயுதங்களை எங்களிடமிருந்து எவராலும் பிரிக்கமுடியாது.” : மு.க.ஸ்டாலின் சூளுரை!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்ததின விழா மற்றும் தேர்தலில் மகத்தான வெற்றிபெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது.
கூட்டணிக் கட்சித் தலைவர்களால் மேடை நிறைய - தொண்டர்களால் அரங்கம் நிறைய நடைபெற்ற இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவுரை ஆற்றினார். அவர் பேசியதாவது :
“ஒற்றுமையோடு தேர்தல் பணியில் ஈடுபட்டு மிகப்பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறோம். அண்ணா மறைவுக்குப் பிறகு தலைவர் கலைஞர் தலைவராகப் பொறுப்பேற்றுச் சந்தித்த முதல் நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியைப் போலவே, இந்தத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறோம்.
தலைவர் கலைஞர் அவர்களே, தேர்தலில் பெருவெற்றி பெறச்செய்த மக்களுக்கு மட்டுமல்ல; எங்களை இன்றைக்கும் இயக்கிக்கொண்டிருக்கிற உங்களுக்கும் நன்றி சொல்கிற கூட்டம் என நெகிழ்ச்சியாகப் பேசினார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
மேலும் அவர் பேசுகையில், “தி.மு.க வென்றதால் என்ன பயன் எனக் கேட்டார்கள்...
- இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவம் மேம்பட நாங்கள் போராடுவோம்.
- மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் அலுவல் மொழியாக நாங்கள் போராடுவோம்.
- கச்சத்தீவை மீட்க நாங்கள் போராடுவோம்.
- மரண தண்டனையை ஒழிக்க நாங்கள் போராடுவோம்.
- பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க நாங்கள் போராடுவோம்.
- கேபிள் கட்டணத்தைக் குறைக்க நாங்கள் போராடுவோம்.
- ஜி.எஸ்.டி வரியை ஒழுங்குபடுத்துவதற்குப் போராடுவோம்.
- மேகதாது அணையை தடுக்கிற முயற்சியிலே நிச்சயமாக ஈடுபடுவோம்.
- கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர நாங்கள் போராடுவோம்.
- மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய நாங்கள் போராடுவோம்.
இந்தப் போராட்டக் குணத்தை தி.மு.க என்றைக்கும் கைவிடாது.
தி.மு.க வென்றதால் என்ன பயன் என நாடாளுமன்றம் கூடுகிறபோது நாங்கள் நிரூபித்துக் காட்டுகிறோமா இல்லையா என்பதைப் பாருங்கள்.
பெரியாரின் சுயமரியாதை, அண்ணாவின் இன உணர்வு, கலைஞரின் மாநில சுயாட்சி எனும் மூன்று ஆயுதங்களை என்றைக்கும் எங்களிடத்திலிருந்து யாராலும் பிரிக்க முடியாது.” என உணர்ச்சிகரமாகப் பேசிய மு.க.ஸ்டாலின், இந்தி திணிப்புக்கு எதிராக பெரும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
Also Read
-
புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இதுதான் அமித்ஷாவின் வேலையா?”: ED ரெய்டுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்!
-
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க... “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : நாளை (ஜன.9) முதல் தொடக்கம்!
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
“இளைய தலைமுறைக்கான தமிழ்நாட்டை கட்டி எழுப்பும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!