M K Stalin
திருப்பரங்குன்றத்தில் மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரசாரம்!
ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தொகுதிகளில் தனது இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரையை நேற்று முன் தினம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார்.
கடந்த இரண்டு நாட்களாக ஒட்டப்பிடாரத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று திருப்பரங்குன்றத்தில் கழக வேட்பாளர் டாக்டர். சரவணனை ஆதரித்து சூறாவளி பிரசாரத்தை தொடங்கினார்.
காலை முதலே கோழிமேடு பகுதியில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட மு.க.ஸ்டாலின், திண்ணை பிரசாரம் செய்தும், நடைபயணம் மேற்கொண்டும் சரவணனனுக்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்தார்.
கோழிமேடு பகுதியில் ஏராளமான மக்கள் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தும், செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர். இளைஞர்களிடம் செல்போனை வாங்கி தானே அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார் மு.க.ஸ்டாலின்.
இதனையடுத்து புளியங்குளம் பகுதியில் மக்கள் முன்னிலையில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், மோடி அரசும், எடப்பாடி அரசும் கூட்டுச்சேர்ந்து மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறது. இந்த இரு ஆட்சிகளையும் அகற்ற வரும் 19-ம் தேதி தி.மு.க வேட்பாளருக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
Also Read
-
“திராவிட மாடல் ஆட்சியில் புதுப்பொலிவு பெற்ற 4000 திருக்கோயில்கள்” : அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!
-
“நான் ஏ.ஆர்.ரகுமானுடன் நிற்கிறேன்” : கனிமொழி எம்.பி ஆதரவு!
-
திருச்சியில் 10 இலட்சம் உடன்பிறப்புகளுடன் ‘மாநில மாநாடு!’ : தி.மு.க நிறைவேற்றிய 4 திர்மானங்கள் என்னென்ன?
-
“ஆளுநரின் மைக்கை அணைக்கவில்லை! அதன் அவசியம் எங்களுக்கு இல்லை!” : அமைச்சர் ரகுபதி திட்டவட்டம்!
-
அரசுடன் ஒரு மோதல் போக்கை கடைபிடிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி : CPI(M) செயலாளர் பெ.சண்முகம் கண்டனம்!