M K Stalin
அமேசான் வெற்றியாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
அமேசான் வெற்றியாளர்களைப் பாராட்டி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது :
“புகழ்பெற்ற அமேசான் நிறுவனம் உலகளாவிய அளவில் நடத்திய Pen to publish 2018, தமிழ் மொழிக்கான நெடும் படைப்பு பிரிவில் திராவிட இயக்கத்தின் இளம் எழுத்தாளரான டாக்டர் செந்தில் பாலன் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.
பல்வேறு மொழிகளைச் சேர்ந்த 3,000 எழுத்தாளர்கள் பங்கேற்ற போட்டியில் டாக்டர் செந்தில் பாலன் எழுதிய 'பரங்கிமலை இரயில் நிலையம் ' என்ற புதினம், கிண்டில் (kindle) வாயிலாக அதிகமானவர்களால் படிக்கப்பட்டிருப்பதுடன், போட்டிக்கான நடுவர்களாலும் தேர்வு செய்யப்பட்டு ரூபாய் 5 லட்சம் பரிசாகப் பெற்றுள்ளது. இத்தகைய மகத்தான வெற்றியைப் பெற்ற டாக்டர் செந்தில் பாலன் அவர்களுக்கு மனம் கனிந்த வாழ்த்துகளை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல், 2000 - 10,000 வார்த்தைகள் கொண்ட குறும்படைப்பு பிரிவில் பத்திரிகையாளர் விக்னேஷ் சி செல்வராஜ், எழுதிய நீள்கட்டுரையும் பரிசு பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இளம் படைப்பாளிகளை அடையாளம் காணச் செய்யும் இதுபோன்ற போட்டிகளில் சமுதாயத்திற்கு பலன் தரும் படைப்புகளை இவர்கள் தொடர்ந்து வழங்கிட வேண்டுமென வாழ்த்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
334 அரசியல் கட்சிகள் நீக்கம்... தேர்தல் ஆணையம் அதிரடி : தமிழ்நாட்டில் எத்தனை கட்சிகள்? விவரம் உள்ளே !
-
"நிலம் எனும் அதிகாரம் பெற்றவர்களாக நம் மக்கள் இருக்க வேண்டும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கப்பட்ட மாநில கல்விக்கொள்கை - கமல்ஹாசன் பாராட்டு !
-
”எடப்பாடி பழனிசாமியின் வயிற்றெரிச்சலுக்கு இதுதான் காரணம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
4 ஆண்டுகள் - 17 லட்சம் பேருக்கு பட்டா : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!