கல்வி & வேலைவாய்ப்பு

#JobOffers இந்தியன் வங்கியில் உயரதிகாரி பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - பிப்ரவரி 10 கடைசி தேதி!

இந்தியன் வங்கியில், Assistant Manager, Manager, Senior Manager ஆகிய Specialist Officer வேலைகளுக்கு 138 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Credit பிரிவில் Assistant Manager பணிக்கு 85 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று, Business, Management, Finance, Banking ஆகிய படப்பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது, CA, ICWA, CFA ஆகிய பட்டப்படிப்புகள் படித்திருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.23,700 முதல், ரூ.42,020 வரை ஊதியவிகிதம் அளிக்கப்படும். 20 வயது முதல் 30 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Credit பிரிவில் Manager பணிக்கு 15 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று, Business, Management, Finance, Banking ஆகிய படப்பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது, CA, ICWA, CFA ஆகிய பட்டப்படிப்புகள் படித்திருக்க வேண்டும். மேலும், ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.31,705 முதல், ரூ.45,950 வரை ஊதியவிகிதம் அளிக்கப்படும். 25 வயது முதல் 35 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Security பிரிவில் Manager பணிக்கு 15 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று, தொடர்புடைய பணியில் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.31,705 முதல், ரூ.45,950 வரைக்கும் ஊதியவிகிதம் அளிக்கப்படும். 25 வயது முதல் 35 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Forex பிரிவில் Manager பணிக்கு 10 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று, Business, Management, Finance, Banking ஆகிய படப்பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது, CA, ICWA, CFA ஆகிய பட்டப்படிப்புகள் படித்திருக்க வேண்டும். மேலும், 3 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.31,705 முதல், ரூ.45,950 வரைக்கும் ஊதியவிகிதம் அளிக்கப்படும். 25 வயது முதல் 35 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Legal பிரிவில் Manager பணிக்கு 2 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, இளநிலை சட்டப்படிப்பு முடித்து வழக்கறிஞராக பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும், 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.31,705 முதல், ரூ.45,950 வரை ஊதியவிகிதம் அளிக்கப்படும். 25 வயது முதல் 35 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Dealer பிரிவில் Manager பணிக்கு 5 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று, Business, Management, Finance, Banking ஆகிய படப்பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது, CA, ICWA, CFA ஆகிய பட்டப்படிப்புகள் படித்திருக்க வேண்டும். மேலும், 3 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.31,705 முதல், ரூ.45,950 வரைக்கும் ஊதியவிகிதம் அளிக்கப்படும். 25 வயது முதல் 35 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Risk Management பிரிவில் Manager பணிக்கு 5 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று, Business, Management, Finance, Banking, Statistics, Economics ஆகிய படப்பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது, CA, ICWA, CFA ஆகிய பட்டப்படிப்புகள் படித்திருக்க வேண்டும். மேலும், ஒரு வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.31,705 முதல், ரூ.45,950 வரை ஊதியவிகிதம் அளிக்கப்படும். 25 வயது முதல் 35 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Risk Management பிரிவில் Senior Manager பணிக்கு ஒரு காலியிடம் உள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று, Business, Management, Finance, Banking, Statistics, Economics, Econometries, Risk Management, Mathematics ஆகிய படப்பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது, Global Association of Risk Professionals-ல் Financial Risk Manager படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.42,020 முதல், ரூ.51,490 வரைக்கும் ஊதியவிகிதம் அளிக்கப்படும். 27 வயது முதல் 37 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் எழுத்து தேர்வு மார்ச் 8ம் தேதி சென்னை, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும்.

www.indianbank.in எனும் இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் பிப்ரவரி 10.

Also Read: இந்திய தபால் துறையில் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு - பிப்ரவரி 29ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாள்!