India
பா.ஜ.க ஆளும் மாநிலத்தின் அவலம் - உயிருக்குப் போராடிய கணவர்: மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!
பா.ஜ.க ஆளும் மத்திய பிரதேச மாநிலம், கட்னி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராகுல் பர்மன். இவர் சாலை விபத்தில் சிக்கியுள்ளார். அவரை மீட்ட பொதுமக்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அப்போது ஆம்புலன்ஸில் அவரது ரத்தம் சிந்தியுள்ளது. மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வந்தபோது, அவரை உடனே சிகிச்சைக்கு அழைத்துச் செல்லாமல், அங்கிருந்த அவரது மனைவியிடம் வாகனத்தைச் சுத்தம் செய்யும்படி ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வற்புறுத்தியுள்ளனர்.
இதனால் அந்தப் பெண் அழுதுகொண்டே வாகனத்தைச் சுத்தம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்ட ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்குக் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது.
இதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தேவா சாஹு மற்றும் மருத்துவ உதவியாளர் மோஹித் கதிக் ஆகியோர் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.
Also Read
-
“வெற்றிப் பயணம் திட்டதிலும் த.வெ.க அரசின் பித்தலாட்டம்” : பெண்களிடம் கட்டணம் வசூல்!
-
“தவெக அரசு இதோடு தனது கொட்டத்தை அடக்கிக்கொள்ள வேண்டும்” : இந்தி திணிப்பு - தி.மு.க ஐடி விங் எச்சரிக்கை!
-
விலைவாசி உயர்வால் விழி பிதுங்கும் மக்கள்.. ‘வெற்றி’ என Sticker ஒட்டினால் போதுமா? : விளாசிய மு.க.ஸ்டாலின்!
-
இந்தியில் ஊர் பெயர்கள்... எச்சரிக்கை விடுத்த மு.க.ஸ்டாலின்... உடனே 'U Turn' எடுத்த த.வெ.க.. - பின்னணி?
-
தாராபுரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.. மிரட்டிய ரோடு ஷோ.. ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்!