India
“எப்போது ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை மக்கள் பயன்பாட்டிற்கு வரும்?” : தி.மு.க எம்.பி.க்கள் கேள்வி!
இந்திய நாடாளுமன்றத்தில் 2026ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜன.28 அன்று ஒன்றிய அரசின் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கி, பிப்.13 வரை நடைபெற்றது.
இந்நிலையில், இரண்டாம் அமர்வு மார்ச் 9 தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நேற்று (மார்ச் 10) நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தி.மு.க உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகள் பின்வருமாறு,
“நீட் கட்-ஆஃப் குளறுபடிகள் ஏன்? எய்ம்ஸ் மருத்துவமனை பயன்பாட்டிற்கு வருவது எப்போது?” என தி.மு.க எம்.பி. பி.வில்சன் கேள்வி எழுப்பியதன் விவரம் பின்வருமாறு,
“அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு மாநில அரசு வழங்கிய இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ இடங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட மொத்த OBC மருத்துவ இடங்களின் எண்ணிக்கை என்ன?
கடந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு பிரிவிலும் NEET PG தகுதி கட்-ஆஃப்களின் விவரங்கள் மற்றும் சரிவுக்கான காரணங்கள் என்ன?
2014 முதல் அறிவிக்கப்பட்ட AIIMS இன் விவரங்கள், பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் அவற்றின் தற்போதைய முன்னேற்றம் என்ன? அவற்றின் தாமதத்திற்கான காரணங்கள் என்ன?” எனும் முக்கியமான கேள்விகளை பி.வில்சன் எம்.பி எழுப்பியுள்ளார்.
“உர இறக்குமதியில் சீனாவை சார்ந்திருப்பது ஏன்? உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தாது ஏன்?” என திமுக எம்.பி. கே.ஆர்.என். ராஜேஷ்குமார் கேள்வி எழுப்பியதன் விவரம் பின்வருமாறு,
“TMAP மற்றும் யூரியா-கரைசல் தயாரிப்புகள் இறக்குமதி செய்யப்பட்ட அளவு எவ்வளவு?
அக்டோபர் 2025 இல் சீனா ஏற்றுமதியை நிறுத்தியதைத் தொடர்ந்து உர விலைகளில் ஏற்படக்கூடிய சாத்தியமான உயர்வை அரசாங்கம் மதிப்பிட்டுள்ளதா?
உள்நாட்டு உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளின் விவரங்கள்?” என கே.ஆர்.என். ராஜேஷ்குமார் எம்.பி கேட்டுள்ளார்.
Also Read
-
சிவப்பு+மஞ்சள் = காவி... - நீட் எதிர்ப்பு பயணத்துக்கு தடை விதித்த தவெக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
“முதுகெலும்பில்லா ஆட்சி தமிழ்நாட்டில் தொடர வேண்டுமா CM sir?” : அப்பாவு கடும் கண்டனம்!
-
குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையால் வந்த வினை : கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!